Asianet News TamilAsianet News Tamil

தி.மு.க வுக்கு தாவும் அதிமுக முக்கிய புள்ளி... வேதனையில் எடப்பாடி... ஒட்டுமொத்தமா அலறும் அமைச்சர்கள்!

அமைச்சர் பதவி போன மணிகண்டன், தி.மு.க.வுக்கு தவப் போகிறார் என்கிற செய்தியால் ஸ்டாலின் குஷியாகி இருக்கிறாராம், அந்த மாவட்டத்திலிருந்து முக்கிய புள்ளிகளை அப்படியே திமுகவிற்கு மாற்றிவிட தயாராகும் தகவலறிந்து எடப்பாடி பழனிசாமி பயங்கர அப்செட்டில் உள்ளாராம். 
 

Ex Minister manikandan join in dmk
Author
Chennai, First Published Aug 13, 2019, 5:46 PM IST

அமைச்சர் பதவி போன மணிகண்டன், தி.மு.க.வுக்கு தவப் போகிறார் என்கிற செய்தியால் ஸ்டாலின் குஷியாகி இருக்கிறாராம், அந்த மாவட்டத்திலிருந்து முக்கிய புள்ளிகளை அப்படியே திமுகவிற்கு மாற்றிவிட தயாராகும் தகவலறிந்து எடப்பாடி பழனிசாமி பயங்கர அப்செட்டில் உள்ளாராம். 

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக. தலை தப்பியுள்ளது. இதனால் வெற்றி எங்களுக்கே என்று வெற்று வார்த்தைகளை வெளியில் சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட உள்ளுக்குள் பீதியில் நொந்து நூடுல்ஸ் ஆகி கொண்டிருக்கிறது அதிமுக. இந்த எலெக்ஷன்  பஞ்சாயத்து ஒரு புறம் போய்க் கொண்டிருக்க, பதவி போன மணிகண்டன் திமுகவுக்கு தாவுவதாக ஒரு டீம் எடப்பாடி கேங்கிற்கு பீதியை கிளப்பும் செய்தியை கிளப்பி விட்டிருக்கிறது.

Ex Minister manikandan join in dmk

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேமுதிகவை கூட்டணிக்குள் இழுத்தது திமுக ஆனால் பிரேமலதாவும், சுதீஷும் வேறு கணக்குப் போட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். அடுத்த சில நாட்களில் தேமுதிக சில்லு சில்லாக உடைந்தது. இதன் பின்னணியில் பக்கா ஸ்கெட்ச் போட்டது திமுக தான். விஜயகாந்த்திடமிருந்து  பிரிந்த அந்த மூன்று முக்கிய புள்ளிகள் தங்களது சகாக்களோடு பிறகு திமுகவில் ஒட்டிக்கொண்டது. 

இது முடிந்தது மூன்று வருடம் ஆன நிலையில்  தினகரன் கட்சியிலிருந்து செந்தில்பாலாஜி, தங்க தமிழ் செல்வன்,  கலைராஜன் என மூன்று முக்கிய தலைகளை ஒவ்வொன்றாக தூண்டில் போட்டு இழுத்தது, முக்கிய மூன்று புள்ளிகளை இழந்து நிற்கும் அக் கட்சியின் இன்னும் அல்லல் பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 

இந்த நிலையில் அதன் அடுத்த டார்கெட்டாக இருப்பது அதிமுக தான். அக்கட்சியினுள் திமுக தூண்டில் போடலாமா வலையை விரிக்கலாமா என யோசிக்கிறது. இப்போதைக்கு ஒவ்வொன்றாக தூண்டிலில் இழுக்கலாம் என்ற நிலையில் போய்க்கொண்டிருக்கிறது.  

Ex Minister manikandan join in dmk

அதிமுகவின் ஆட்சி, அதிகாரத்தினால் கிடைக்கும்  அதிகார மற்றும் பண பலன்களை அனுபவிப்பது சில சதவீதத்தினர் மட்டுமே. ஆனால் பெரும்பாலான சதவீத நிர்வாகிகள் இதற்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் வாரியம் உள்ளிட்ட பதவிகளை போடாமல் காலம் கடத்திக் கொண்டிருக்கும் தலைமை மீது பயங்கர கடுப்பில் இருக்கின்றனர். 

இந்த கோவக்காரர்களில், மக்கள் செல்வாக்குடைய நபர்களாகப் பார்த்து பேசிவருகிறது திமுக. அடுத்து எங்கள் ஆட்சிதான். அதிமுக. முடிந்துவிடும். அதனால் இப்பவே இங்கே வந்துடுங்க, தேர்தல் சீட், ஜெயித்தால் அமைச்சர், அதுவும் இல்லைன்னா வாரிய தலைவர்!ன்னு பதவி தர்றோம்.ன்னு  ஆசையை தூண்டி இழுக்க ஆரம்பித்துள்ளது. 

யாரும் இதுவரை அசைந்து கொடுக்காத நிலையில், சமீபத்தில் எடப்பாடியாரால் பதவி பறிக்கப்பட்ட மாஜி ஐடி அமைச்சர் மணிகண்டனை எப்படியாவது திமுகவினுள் வளைத்துப் போட படாதபாடு படுகிறார்கள் சபரீசன் கேங். ராமநாதபுரம் மாவட்ட திமுகவை பொறுத்தவரை  சுப.தங்கவேலன் டீமை தவிர உருப்படியாக யாருமே இல்லாத நிலையில் மணிகண்டனை அந்த இடத்தில் வைப்போம்! எனும் ஆசை காட்டியுள்ளாகளாம் . 

Ex Minister manikandan join in dmk

ஆனா பாருங்க மணி இதுவரையில் ஓ.கே. சொல்லலையாம். எடப்பாடியாரிடம் மன்னிப்பு கேட்ட பின் அவர் இவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுக்காவிட்டால், நிச்சயம் மணிகண்டன் காண்டாகிவிடுவார். அப்போது அவர் எடுக்கும் முடிவானது திமுகவில் இணைவதாகதான் இருக்கும். 

தற்போது அதிமுகவில் கொங்கு அமைச்சர்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கிடப்பதை எதித்துதான் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பேட்டியளித்து, சிக்கலில் சிக்கிய அவர் இப்போது திமுகவுக்கு மாறிவிட்டால், கொங்கு அமைச்சர்களின் ஆயிரக்கணக்கான கோடி சொத்து விவரங்களை  ஆதாரத்தோடு வெளிப்படுத்த தயங்கமாட்டார். 

அதிரடி பேர்வழியான எக்ஸ் ஐடி மினிஸ்டர் அதிமுகவில் இருக்கும்போதே இப்படி வெளிப்படையாக போட்டுடைக்கிறார் என்றால் திமுகவில் இணைந்த பின் அதிமுகவை எந்தளவுக்கு ஆவேசமாக பழிவாங்குவார்!? என்பதே எல்லோரின் எண்ணமும். இதை நினைத்துதான் அதிமுகவும் அலறிக் கிடக்கிறது. 

Ex Minister manikandan join in dmk

ஆனால், உடனடியாக மீண்டும் மணிகண்டனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் எடப்பாடியார் மேல் கட்சியினருக்கு எழுந்திருக்கும் பயம்  பிளஸ் நம்பிக்கை கெட்டுவிடும். அதே நேரத்தில் மணியும் கட்சி தாவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! எனும் இரண்டையும் ஒரே நேரத்தில் எண்ணி தவிக்கிறது அக்கட்சி. மணிகண்டன் முகாம் மாறினால் திமுக.வுக்கு பெரும் கொண்டாட்டம் தான். மணிகண்டன் திமுகவுக்கு சென்ற பின் சும்மா இருப்பாரா? தமிழக அமைச்சர்களின் ஃப்ராபர்ட்டி மேட்டர் உள்ளிட்ட பல சிக்கல்கள் மற்றும் அரசாங்கத்தின் உள் சிக்கல்கள் என ஒட்டுமொத்தமா போட்டுடைக்க தயங்க மாட்டார் என அமைச்சர்கள் எடப்பாடியிடம் புலம்பி தவிக்கிறார்களாம்.  

Follow Us:
Download App:
  • android
  • ios