திருச்சி என். செல்வராஜ் திமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். 1944ம் ஆண்டு துறைமங்கலத்தில் பிறந்தவர். நீண்ட நாட்களாக திமுகவில் உறுப்பினராக இருந்தவர். இவருக்கு தற்போது 75 வயதாகிறது.

இவர்  திருச்சி மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சராவார். இவர் 1987 முதல் 1993வரை இப்பதவியில் இருந்தார். இவர்  நாடாளுமன்ற உறுப்பினராக 1980–84 ஆண்டுகளில் இருந்தார்.

செல்வராஜ் தி.மு.க சார்பில் 2006 ஆண்டு  முசிறி சட்டமன்ற தொகுதியில்  போட்டியிட்டு அதிமுக வேட்பாளரான பூனாட்சியை  10,927 வாக்குகளில் தோற்கடித்தார். தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார். இவர் பொறியியல் கல்வி கற்று பொறியாளராக தொழில் செய்தவர்.

கடந்த 2016ல் இவர் அதிமுகவில் இணைந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலகி இருந்தார். இன்று மாலை இவர் உடல் மோசமாகவே மருத்துவர்கள் இவரை பரிசோதித்தனர். இந்த நிலையில் மாலை  செல்வராஜ் உடல் நலக்குறைவால் திருச்சியில் காலமானார். இவரது மறைவிற்கு அதிமுக, திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.