காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை தீர்க்கமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் அவரது வீடு முன் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

 

சோனியா காந்தியின் தலைமையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் ராகுல்காந்தி தனது பதவி விலகல் பற்றி பேசியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் வெளியானது. இது நாடு முழுவதும் உள்ள அக்கட்சி தொண்டர்களிடையே பதற்றத்தையும், பிற தேசிய கட்சிகளிடையே சலனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

ஆனால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, தான் விலகும் முடிவில் உறுதியாக உள்ளதாகவும், அதுகுறித்து மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, காங்கிரஸ் தலைவராக தொடர ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்ததை அடுத்து, ராகுல்காந்தி தலைவராக தொடர வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என ராகுல் காந்தியின் வீட்டின் முன் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.