தமிழக காங்கிரஸின் தற்போதைய தலைவர் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்ட திருநாவுக்கரசருக்கும், அதற்கு முன்னாள் இருந்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் இடையில் நடந்த கோஷ்ட்டி மோதல்   டெல்லி வரை ஒலித்தது. நாடாளுமன்ற தேர்தல் வரை நான் தான் தலைவர். யாரும் என்னை எதுவும் பண்ண முடியாது! என தௌலத்து காட்டி வந்த  திருநாவுக்கரசரை அந்தப் பதவியிலிருந்து இறங்க வைத்தே தீருவது என்று போட்ட சபதத்தில் இளங்கோ அட்ச்சி தூக்கியிருக்கிறார். 

ஆனால், இது எல்லாமே சிதம்பரத்தின் துணையோடு அழகிரியை அந்த பதவியில் அமரவைத்து அழகு பார்த்துள்ளனர் திருநாவுக்கரசின் எதிர் கோஷ்ட்டிகள். 

இதனையடுத்து மீடியா முன்னாடி நின்ற கே.எஸ்.அழகிரி, “தமிழகம், புதுச்சேரியில் வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெற பாடுபடுவேன். கட்சியில் இளைஞர்களைச் சேர்க்க செயல் தலைவர்களுடன் சேர்ந்து பாடுபடுவேன் எனக் கூறினார். பேச்சுக்கு, திருநாவுக்கரசுக்கான இடம் எப்போதும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்” என்றார்.

இந்நிலையில் கட்சியில் பதவி வாங்கிய கையேடு களத்தில் குதித்துள்ளார். அதன் முதல் கட்டமாக வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல்  குழுக்களை அமைத்தது காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது. தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்துள்ளது. அதேபோல, ஒரு பக்கம் தனது எதிரி திருநாவுக்கரசை தூக்கியடித்த குஷியில் இருந்த மாஜி காங்கிரஸ் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் 14 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு அமைத்துள்ளது காங்கிரஸ் தலைமை.