பிரதமர் மோடியால்கூட காப்பாற்ற முடியாததால் அடுத்த 21 நாட்கள் சுய ஒழுங்கு உத்தரவிட்டுள்ளாதாக கூறப்படுகிறது.

மோடி கொரோனா குறித்து பேசுகையில், ‘’கொரோனா நோயை கட்டுப்படுத்துவது மிகக் கடினம். அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% தடுக்க முடியும். வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களை காப்பாற்ற வேண்டும். நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி ஓடிக்கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஒரேவழி வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது தான்.

 அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொறுமை காத்து ஆதரியுங்கள். பொருளாதாரத்தை விட, மக்கள் பாதுகாப்பு முக்கியம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் திறன்பட உள்ளார்கள். கொரோனா காட்டுத் தீ போல் பரவி வருகிறது.  தயவு செய்து அனைவரும் வீட்டிலேயே இருங்கள்.  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது உங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தான்.

24 மணி நேரமும் காவல்துறையினரும், மருத்துவர்கள் மட்டுமே இருப்பார்கள். உலகத்தில் நடக்கும் அத்தனை பிரார்த்தனைகளையும் மக்களிடம் தெரிவியுங்கள். தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள். பொருளாதாரத்தைவிட, மக்களின் நலனே முக்கியம். கொரோனாவை  தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. சுத்தம்- சுகாதாரம் என இருப்பதன் மூலம் நன்மை காக்கப்படுகிறார்கள். 

மக்கள் சுய கட்டுப்பாடு என்றால் நம்மை நாமே எடுத்துக் கொள்வோம். பொருள்களை வாங்க ஒரே இடத்தில் எல்லோரும் குவிய கூடாது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பது உங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்படுகிறது. மக்களுக்கு இது மிகக் கொடுமையானதாக இருக்கும். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு இருந்து கையெழுத்து கும்பிடுங்கள்.

 ஊரடங்கு மூலம் பொருளாதார பாதிக்கப்பட்டாலும் மக்களின் நலனே முக்கியம் நீங்கள் வெளியே சென்றால் வீட்டிற்கு கொண்டு வரும். 21 நாள்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் உங்களை வந்தடையும். உங்களுக்கான கட்டமைப்பு மேம்படுத்த 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் பேசினார்.

நீங்கள் ஒதுக்கிய இந்த 15 ஆயிரம் கோடி ரூபாய், 130 கோடி மக்களை, 21 நாட்கள் பாதுகாக்க அந்தப்பணம் போதுமா பிரதமர் மோடி..? சாரி, இல்லையென்றால் இந்தியா மக்களின் நிலை..?