Asianet News TamilAsianet News Tamil

சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் இருக்காது..! சிபிஐ மாநிலசெயலாளர் பேட்டி..!

ஓபிஎஸ் இபிஎஸ் மோதலால் நிர்வாகம் சீர்குலைந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Even if Sasikala comes out of jail, there will be no change in Tamil Nadu politics ..! CBI Secretary of State interview ..!
Author
Tamilnadu, First Published Oct 5, 2020, 11:34 PM IST

ஓபிஎஸ் இபிஎஸ் மோதலால் நிர்வாகம் சீர்குலைந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Even if Sasikala comes out of jail, there will be no change in Tamil Nadu politics ..! CBI Secretary of State interview ..!

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது...
"அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்டுகளை குடியேற விடக்கூடாது என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களால் கம்யூனிஸ்ட்களின் வளர்ச்சியை ஒருபோதும் தடுக்க முடியாது. அமெரிக்காவைப் போல இந்தியாவிலும் அனைத்து துறையும் தனியார் மயமாக்க வேண்டும் என்ற மத்திய அரசு முனைப்புக் காட்டுகிறது. கோடிக்கணக்கான விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்து விடுவது போன்று சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அக். 12ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

Even if Sasikala comes out of jail, there will be no change in Tamil Nadu politics ..! CBI Secretary of State interview ..!

 விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தலைமையிலான அணி, தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க உருவாக்கப்பட்ட அணி. இந்த அணி பலமாக உள்ளது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து தொடர்ந்து பிரச்னை உள்ளது. இது அவர்களின் உட்கட்சி பிரச்னை என்றாலும், இப்படி இவர்கள் பகிரங்கமாக மோதி கொள்வதால் நிர்வாகம் சீர்குலைந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சசிகலா சிறையில் இருந்து வந்த பின் அரசியல் மாற்றமெல்லாம் இருக்காது. கூறினார்.
 
Follow Us:
Download App:
  • android
  • ios