பாமக நடத்திய இடஒதுக்கீடு கோரிக்கை போராட்டத்தில் பா.ம.கவினர் ரயிலில் கல்லெறிந்தது பற்றி கேள்வி கேட்டால் டாக்டர். அன்புமணி இராமதாசு பத்திரிக்கையாளர்களை மிரட்டுகிறார்.
டாக்டர். ராமதாஸ் அவர்கள் ஜெயிலுக்கு போவதை முதல்வர் எடப்பாடியால் கூட தடுக்க முடியாத நிலை ஏற்படும் எனவும், பாமக போராட்டத்தில் இரயில் பயணிகள்மீது தாக்குதல் மிகவும் கண்டனத்திற்கு உரியது என ஆம் ஆத்மி தமிழக தலைவர் வசீகரன் எச்சரித்துள்ளார். பாமக நடத்திய இடஒதுக்கீடு கோரிக்கை போராட்டத்தில் பா.ம.கவினர் ரயிலில் கல்லெறிந்தது பற்றி கேள்வி கேட்டால் டாக்டர். அன்புமணி இராமதாசு பத்திரிக்கையாளர்களை மிரட்டுகிறார். பத்திரிக்கையாளர்களை பாமகவினர் அடிக்க பாய்கிறார்கள். இவை அனைத்தும் தமிழக முதல்வர் எடப்பாடியின் அறைக்கு எதிரே தலைமை செயலகத்தில் நடக்கிறது.
அறவழி போராட்டம் என்ற பெயரில் நாடக போராட்டம் நடத்தி முதல்வரிடம் கூட்டணி பேரம் பேசிவிட்டு வரும் அன்புமணி நடத்திய போராட்டத்தை போலிசார் மெதுவாக கையாள வேண்டும் என எடப்பாடி உத்தரவிட்டுள்ளார் என்று நினைக்கிறேன். ஓடும் ரயிலின் குறுக்கே தண்டவாளத்தை குறுக்கே போட்டு கவிழ்க்க பா.ம.கவினர் முயன்றுள்ளனர். ரயில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் அந்த பயணிகள் ரயில் கவிழாமல் நிறுத்தப்பட்டது பயணிகள் உயிர் தப்பினார்கள். ஆனால் நிறுத்தப்பட்ட ரயிலில் பயணம் செய்த அப்பாவி பயணிகள் மீது பா.மக.வினர் கற்களை வீசியிருக்கிறார்கள். இது குறித்து முறையான வழக்குகள் எதுவும் கல்வீசிய மற்றும் தண்டவாளத்தை ரயிலின் குறிக்கே போட்ட பா.ம.கவினர் மீது போலிசார் பதிவு செய்யவில்லை.
அறவழி போராட்டம் என்று அழைக்கப்பட்ட போராட்டம் ஏன் அராஜக போராட்டமாக மாறியது என பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால் பா.மகவின் தலைவர் அன்புமணி வழக்கறிஞர் பாலு ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் மீது கோபத்துடன் பாய்கிறார்கள்.ஜெ ஆட்சியின் போது தமிழகம் முழுவதும் திரு.ராமதாஸ் அவர்கள் பல சிறைகளுக்கு மாற்றபட்டது மறந்து போனதா? திரு.அன்புமணியின் தாயார் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்து மடிபிச்சை கேட்டு கெஞ்சியது மறந்து போனதா? இன்று ரயில் பாதையில் தண்டவாளம் போட்டு கவிழ்க்க முயற்சித்த பா.ம.கவினர். நாளை இதைவிட மோசமான சேதம் ஏற்படக்கூடிய ஏதாவது சட்ட விரோத வன்முறைகளில் ஈடுபட்டால் டாக்டர்.ராமதாஸ் அவர்கள் ஜெயிலுக்கு போவதை முதல்வர் எடப்பாடியால் கூட தடுக்க முடியாத நிலை ஏற்பட கூடும்.
நல்ல முற்போக்கு சிந்தனை மற்றும் நாட்டின் வளர்ச்சி பற்றிய தொலைநோக்கு சிந்தனை கொண்ட டாக்டர் அன்புமணி அவர்கள் மீண்டும் மாற்றம் முன்னேற்றம் ஏற்படுத்திட முன்வர வேண்டும். மக்கள் விரும்பாத இது போன்ற வன்முறை ஏற்படுத்தும் போராட்டங்களை தவிர்ப்பது நல்லது. என அவர் கூறியுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 2, 2020, 10:11 AM IST