பொதுவாகவே கிறிஸ்துமஸ், இஸ்லாம் மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் திமுக தலைவர்கள் இந்து மத பண்டிகையான தீபாவளி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை. ஆனால் பொங்கலை மட்டும் கொண்டாடுவார்கள். காரணம் கேட்டால் தமிழர் பண்டிகை எனக்கூறுவார்கள்.

 

அப்படி சில தினங்களுக்கு முன் சென்னை கொளத்தூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் விழா நடந்தது. துர்கா ஸ்டாலின் பொங்கலிட்டார். சென்னை கொளத்தூரில் உள்ள அனித அச்சீவர்ஸ் அகாடமி வளாகத்தில் அப்பகுதி தி.மு.க.வினரின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நேற்று மாலை நடந்தது. இதில் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வான தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் கலந்துகொண்டார்.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவரது மனைவி துர்கா, புதுப்பானையில் பொங்கலிட்டு, அனைவருக்கும் வழங்கினார். பின்னர் அப்பகுதி பெண்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை முன்னிறுத்தி போட்ட கோலங்களை மு.க.ஸ்டாலின், தனது மனைவியுடன் பார்வையிட்டார்.

இந்நிலையில், அவர் பொங்கல் பரிசை ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு வழங்கினார். அந்தப்புகைப்படத்தை மட்டும் வெளியிட்டார்கள். அதனை உள்வாங்கிக் கொண்ட நெட்டிசன்கள் பொங்கல் விழாவுக்குக்கூட இஸ்லாமிய பெண்ணை கூப்பீட்டு தான் ஸ்டாலின் வாழ்த்து சொல்வார் என பதிவிட்டு வருகின்றனர். 


மற்றொருவர்,  பொங்கல் விழாவை பற்றி  குரான், பைபிளில் குறிப்படப்படவில்லை. பொங்கல் இந்துக்களுக்கு மட்டுமேயான பண்டிகை. சூர்ய கடவுளுக்கும், இயற்கைக்கும் அறுவடை திருநாளில் நன்றி சொல்லும் பண்டிகை. தமிழ் கலாச்சாரப்படி கொண்டாடப்படும் இந்து பண்டிகை. இதை வைத்தும் அரசியல் நடந்துகிறார்கள்’’ என மு.க.ஸ்டாலினை கண்டித்துள்ளனர்.