Ettapadi Palinasamy all supported DDV Daykar as Chief Minister.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவை சசிகலா வழிநடத்தி வந்தார். ஆனால் சொத்த்துகுவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் அவருக்கு நம்பிக்கையான ஆட்களை தேர்வு செய்து கட்சியை ஒப்படைக்க வேண்டும் என முடிவெடுத்தார்.
இதனால் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமனம் செய்தார். அப்போது டிடிவி தினகரனை முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி முதல் அனைவரும் ஆதரித்தனர்.
மேலும் கட்சியை அவரது தலைமையில் கொண்டு செல்ல வேண்டும் என அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் உறுதி எடுத்தனர்.
ஆனால் ஆரம்ப தினம் முதலே பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கரம் நீட்டி வந்தது மத்திய பாஜக. இதைதொடர்ந்து ஆட்சியை காப்பாற்றி கொள்ள மத்தியில் இணக்கத்துடன் இருக்க வேண்டும் என முடிவெடுத்த எடப்பாடி ஒபிஎஸ்சையும் ஆதரிக்க தொடங்கினார்.
அதற்கு சரியான சந்தர்ப்பமாக இரட்டை இலை சின்ன விவகாரத்தில் டிடிவி தினகரன் ஜெயிலுக்கு போனார். அப்போது அடக்கி வாசித்த டிடிவி சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் போர்கொடி தூக்க ஆரம்பித்தார்.
தான் கட்சியில் தொடர்ந்து பணியாற்றுவேன் என தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கினார். இதை முறியடிக்கும் வகையில் ஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் ஒன்றாக கைகோர்த்தனர்.
இது டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு இன்னும் கோபத்தை உண்டாக்கியது. எடப்பாடிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இருந்தாலும் மத்திய அரசின் தயவால் ஆளுநர் இதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பை கோரவில்லை.
இதைதொடர்ந்து இன்று பலத்தை நிரூபிக்க எடப்பாடி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டினார். அதில் 109 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில், டிடிவி தினகரன் தமது பலத்தை நிரூபிக்க நீட் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது வரும் 9 ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும் போராட்டம் அறிவித்துள்ளார்.
அதற்கு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் ஆட்சியை கையில் வைத்து கொண்டு தினகரனை ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற கலக்கத்தில் இருக்கும் எடப்பாடி தரப்பு இன்னும் கதிகலங்கி போய் உள்ளது.
