நெல்லையில், “அரசியல் ஆளுமை! தலைவர் கலைஞர்” அவர்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் செலுத்தும் புகழஞ்சலி கூட்டம் அனைத்துக்கட்சி கூட்டம் கி வீரமணி தலைமையில் நடந்து வருகிறது. 

இந்த கூட்டத்தில், வைகோ, கி.வீரமணி, தமிழிசை சவுந்தரராஜன், GK வாசன், திருமாவளவன், திருநாவுகாரசார், GK மணி, முத்தரசன் மற்றும் எஸ்றா சற்குணம் இந்த புகழஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் சிறப்புரை ஆற்றிக்கொண்டிருந்த எஸ்றா சற்குணம் திமுகவினரின் தலையில் குண்டை தூக்கிப் போட்டுவிட்டார். அதாவது கருணாநிதி ஆட்சியில் இல்லாத சமயத்தில் பேச்சுத் துணைக்கு தம்மை அழைப்பதாக பேசினார். இதைப் பார்த்த TR பாலு தலையில் அடித்துக் கொண்டு பக்கத்தினுள் இருந்த தயாநிதி மாறனிடம் தலைவர் பேச்சுத் துணைக்கு இவரையா அழைப்பார் என கேட்பதைப்போல அதற்கு தயாநிதி மாறனோ அதெல்லாம் புளுகு என சொல்வதைப்போல ரியாக்ஷன் இருந்தது.

ஒரு பெரிய இயக்கத்தின் தலைவரை பேச்சுத்துணைக்கு தன்னை தான் அழைப்பார் என இப்படி ஒரு பில்டப் விடலாமா? பார்க்கும் திமுகவினருக்குத் தான் ஒன்றுமே தெரியாதா?