AIADMK: ஓபிஎஸ் உடன் எடப்பாடி இணைய வேண்டும்.. அதிமுக வரலாற்றில் முதன் முறையாக..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருதரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், அதிமுக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும்.
அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையீட்டில் தேர்தல் ஆணையம் செய்துள்ள பதிலில், அதிமுக சார்பாஜ் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. இந்த பொதுக்குழு நடந்த விதத்தை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை என்று கூறப்பட்டது.
வேட்புமனு தாக்கல் 7ம் தேதி முடிகிறது. அப்படி என்றால் 7ம் தேதிக்குள் என்ன முடிவு எடுப்பது பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்க எங்களை கட்டாயப்படுத்துகிறீர்களா? என்று நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினார்கள். ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திட தயாராக உள்ளேன், ஆனால் எனது கையெழுத்தை ஏற்க ஈபிஎஸ் மறுக்கிறார் என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது.
இரட்டை இலை சின்னத்துக்காக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட முன்வந்தால், எங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப் பெற தயார் என ஓ.பி.எஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் சமாதானம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. அப்போது, அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுத்து ஒப்புதல் வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் பொதுக்குழுவில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் கூறினர்.
ஈரோடு இடைத்தேர்தலில் இருவருக்கும் உகந்த பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், இடைத்தேர்தலுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும், அதிமுக பொதுச் குழு முடிவிற்கு கையெழுத்து பெற ஒ பி எஸ் தரப்புக்கு எடப்பாடி அனுப்பலாம். அதில் கையெழுத்து போடுவது அவர் முடிவெடுக்கலாம். அதை அவை தலைவர் தமிழ் மகன் உசைன் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பலாம்
இதையும் படிங்க..சவுக்கு சங்கர்,அண்ணாமலை, கர்நாடகா.. பெரிய லிஸ்ட்டா இருக்கே! பாஜகவை வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்