ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. மதவாத சக்திகளுக்கு சம்மட்டி அடி.! பாராட்டிய கமல்ஹாசன் !!
மதவாத சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
கடந்த 2021 ம் ஆண்டு ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற திருமகன் ஈவெரா திமுகவின் மதசார்பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டார்.
இவருக்கு அடுத்த இடத்தில் தாமாகவை சேர்ந்த யுவராஜாவை விட திருமகன் 8904 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் இங்கே பெரும்பான்மையில் வெற்றிப்பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வரலாற்றில் இதுவரை யாரும் இவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கிடையாது. அந்த வகையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்
அதிமுக தவிர பிற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், மதவாதசக்திகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கும்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வீரர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும்,தோழமைக் கட்சிகளுக்கும்,தேசம் காக்க என்னோடு கைகோர்த்த மநீம சொந்தங்களுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலைவாய்ப்பு.. 281 காலியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி.?