Asianet News TamilAsianet News Tamil

நீங்க கால்வச்ச கட்சியெல்லாம் ஒன்னும் இல்லாம போச்சு.. ஆளவிடு சாமி,பண்ருட்டியாரை ரோட்டில் போட்டு புரட்டிய இபிஎஸ்

அறிவுரை சொல்லும் பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து எப்போது வெளியே போனீர்களோ அப்போதே உங்களுக்கு தகுதியும் போய்விட்டது என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

EPS said that Panruttiyar has no right to criticize AIADMK
Author
First Published Sep 16, 2022, 3:00 PM IST

அதிமுக அதிகார மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா என பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுக மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமசந்திரனை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம பேசிய பண்ருட்டி ராமசந்திரன்,  எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் நிராகரிக்கரிப்பதாகவும்,  தலைமை பண்பு இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்  அதிமுக இக்கட்டான இந்த நேரத்தில் கட்சியை காப்பாற்ற அனைவரையும் அரவனைத்து செல்லும் தாயுள்ளம் கொண்ட தலைமை தேவை, எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட விருப்பு வெறுப்பை வைத்து தலைமை பொறுப்பில் இருந்து அரசியலை நடத்துவதாகவும் அது கட்சிக்கு ஆபத்து என தெரிவித்தார். மேலும் அதிமுகவில் தற்போதைய போக்கு நீடித்தால் கட்சி அழியும். நீதிக்கட்சி எப்படி அழிந்ததோ அப்படி அழியும் என கூறியிருந்தார்.

தமிழகத்திற்கு 4 முதலமைச்சர்கள்..? யார்? யார்? தெரியுமா..? திமுக அரசை இறங்கி அடித்த இபிஎஸ்

EPS said that Panruttiyar has no right to criticize AIADMK

உங்க அறிவுரை தேவையில்லை

இந்தநிலையில் மின் வெட்டு உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் செங்கல்பட்டில் ஆர்பாட்டம்  நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, பண்ருட்டி ராமசந்திரன் கருத்திற்கு பதிலடி கொடுத்தார். ஜெயலலிதா பற்றிய விமர்சனம் செய்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். பாட்டாளி மக்கள் கட்சி போய் யானையில் வந்து இறங்கினார் அந்த யானையையும் பண்ருட்டி ராமச்சந்திரன் மறந்துவிட்டார். இதற்கு அடுத்து தேமுதிக சென்று  தேமுதிகவில் போய் வெற்றி பெற்றார்.  இப்போது அந்த கட்சியும் படுக்க வைத்து விட்டார். அதிமுகவிற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவுரை கூறுகிறார் தயவு செய்து உங்கள் அறிவுரை எங்களுக்கு வேண்டாம். அதிமுக நன்றாக உள்ளது. எந்த எந்த கட்சிக்கு போய் நீங்க அறிவுரை சொன்னீர்களோ அந்த கட்சி எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. எனவே உங்களது அறிவுரை எங்களுக்கு தேவை இல்லை. எங்களை ஏற்றுக் கொண்டால் இங்கே தொடருங்கள்,  உங்களுக்கு மனம் இல்லாவிட்டால் தயவு செய்து குறை கூறி பேசாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.

ஸ்டாலின் தொகுதியில் மாஸ் காட்டும் பாஜக..! மோடி பிறந்தநாளில் 720 கிலோ மீன், தங்க மோதிரம்..! எல்.முருகன் அதிரடி

EPS said that Panruttiyar has no right to criticize AIADMK

பண்ருட்டி ராமசந்திரன் வேடதாங்கல் பறவை

எனது தலைமையில் சந்தித்த தேர்தலில் எல்லாம் தோல்வியை சந்தித்ததாக கூறுகிறார் நான் என்ன பேமஷான நபரா நானும் தொண்டர்களில் ஒருவன் தான். தொண்டரோடு இருக்கேன் மக்களோடு இருக்கிறேன். சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களில் வெற்றி பெற்றோம். பெரிய, பெரிய தலைவர்களுக்கெல்லாம் தொல்வி வந்துள்ளது. நான் தொண்டர்களில் ஒருவன், அதிமுக ஆட்சி காலத்தில் நம்ம கட்சிக்குள் இருந்து குழி பறித்தவர்களும் இருந்தார்கள். அதையும் சரி செய்தே ஆட்சியே வழிநடத்தினேன். சிலருடைய தூண்டுதலின் பேரில் பண்ருட்டி ராமச்சந்திரன் தேவையில்லாத கருத்தை அவதூறு பிரச்சாரத்தை பரப்பி வருகிறார்.

பண்ருட்டி ராமசந்திரனுக்கு சாதாரண கிளைச் செயலாளருக்கு இருக்கின்ற தகுதி கூட உங்களுக்கு இல்லை. எம்ஜிஆர் காலம் முதல் தற்போது வரை விசுவாசமாக இருப்பவன் தான் உண்மையான தொண்டன்.  உங்களுக்கு கட்சியின் மீது விசுவாசம் இல்லை மக்கள் மீது விசுவாசம் இல்லை. வேடந்தாங்கல் பறவை போல் சீசனுக்கு வருவது போல் கட்சி மாறுபவர்கள் நீங்கள். நீங்கள் எவ்வளவுதான் ஒரு பிரச்சாரங்களை கூறினாலும் அதனை படிக்கட்டுகளாக மாற்றுவேன். மீண்டும் அம்மாவுடைய அரசு அமையும் என எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஸ்டாலின் தொகுதியில் மாஸ் காட்டும் பாஜக..! மோடி பிறந்தநாளில் 720 கிலோ மீன், தங்க மோதிரம்..! எல்.முருகன் அதிரடி

 

Follow Us:
Download App:
  • android
  • ios