அரசு பணியில் 25 ஆயிரம் காலிபணியிடம்.!குரூப் 4 வெற்றி பெற்றவர்களில் 20,000 பேரை உடனடியாக நியமித்திடுக- இபிஎஸ்

TNPSC தொகுதி -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன, எனவே 2022ம் ஆண்டு தொகுதி -4க்காக நடைபெற்ற தேர்விலிருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

EPS Request for Recruitment of 20000 Govt Jobs from TNPSC Group 4 Candidates

 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் கடந்த 2018ம் ஆண்டு 12 ஆயிரம் காலிப்பணியிடங்களும், 2019ம் ஆண்டு 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இதனையடுத்து கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகள் தேர்வுகள் நடத்தப்படவில்லை. குரூப் 4 தேர்வுகளுக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த 2022ஆம்ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

தேர்வு, கடந்த ஜூலை 24ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது.  8 மாதங்கள் ஆன பிறகு மார்ச் 24ஆம் தேதி முடிவுகள் வெளியாகின.இதுவரை கலந்தாய்வு நடைபெறாத நிலை உள்ளது. இந்தநிலையில்  இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொகுதி-4 காலிப்பணியிடங்களுக்காக, நடைபெற்ற TNPSC தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023ல் வெளியானது. 

EPS Request for Recruitment of 20000 Govt Jobs from TNPSC Group 4 Candidates

20ஆயிரம் பேரை பணி நியமனம் செய்திடுக

ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை. இந்நிலையில்,TNPSC தொகுதி -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன, எனவே 2022ம் ஆண்டு தொகுதி -4க்காக நடைபெற்ற TNPSC தேர்விலிருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள 20000 பணியிடங்களையாவது உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். TNPSC தொகுதி -4க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது , இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகிறார்கள் , ஆகவே விரைந்து தொகுதி -4க்காண காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இதையும் படியுங்கள்

ஒரு சிலரின் பண திமிரால், சுயநலத்தால் பிரிந்து நிற்கிறோம்..! ஓபிஎஸ்யோடு கைகோர்த்த டிடிவி தினகரன் ஆவேசம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios