நேரம் கேட்ட எடப்பாடி பழனிசாமி..! உடனே ஓகே சொன்ன ஆளுநர்..! திமுக அரசுக்கு எதிராக களம் இறங்கும் அதிமுக
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், தீவிரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிட்டதாக தெரிவித்து வரும் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக புகார் மனு அளிக்கவுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் திமுக ஆட்சிக்கு வந்தபின் போதைப் பொருட்கள் விற்பவர்கள், சமூக விரோதிகள், தீவிரவாதிகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் எல்லாம் லைசென்ஸ் பெற்றதுபோல் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என குற்றம்சாட்டியிருந்தார். மேலும் தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவலர்களின் கைகள் கட்டப்பட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் கதவுகள் திறக்கப்படுகின்றன. திமுக தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை பொது மேடையிலேயே, காவலர்கள் பாதுகாப்புக்காக இருக்கும் போதே, பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
அரசு நிறுவனத்தையும் திமுக பலிகொடுக்க நினைக்கிறது... அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!!
ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்
நான் கடந்த இரண்டு பட்ஜெட் கூட்டத் தொடர்களிலும் பேசும்போது, தமிழகத்தில் நடைபெற்ற பல போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, வழிபறி சம்பவங்களைப் பற்றி குறிப்பிட்டு பேசினேன். குறிப்பாக, தனியாக வசிக்கும் வயதான முதியவர்கள் மீது தொடுக்கப்படும் கொலைவெறி தாக்குதல்களையும் குறிப்பிட்டு, தமிழக மக்கள் பாதுகாப்பாக வாழ தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தேன். மேலும் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மதியம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசவுள்ளார். அப்போது திமுக அமைச்சர்கள் மீதான ஊழல், சட்டம் ஒழங்கு பிரச்சனை குறித்த பட்டியலை ஆளுநரிடம் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்