போதைப்பொருள் மாபியா தலைவனுக்கு அங்கீகாரம்... ஸ்டாலினும், உதயநிதியும் உடனடியாக பதவி விலகனும்- விளாசும் இபிஎஸ்
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக்கிற்கு கட்சியில் அங்கீகாரம் அளித்த முதலமைச்சர் ஸ்டாலினும், உதயநிதியும் தார்மீக பொறுப்பேற்று இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்
ஜாபர் சாதிக் கைது
வெளிநாட்டிற்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி கூறுகையில், திரைப்படம் தயாரிப்பதற்க்கும், கட்டுமான நிறுவனத்திலும் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை முதலீடு செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் நன்கொடை வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளராக இருந்த ஜாபர்சாதிக் 3ஆண்டுகளாக 3500கிலோ போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை கடத்தியுள்ளதாகவும்,
ஸ்டாலினும், உதயநிதியும் பதவி விலகனும்
திமுக மற்றும் அதனைச் சார்ந்தோருக்கு ஜாபர் சாதிக் நிதியளித்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்துள்ளன. அந்த போதைப்பணத்தில் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்த நிலையில், தன்னுடைய ஆட்சியில் தன் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கும் போதே, 3 ஆண்டுகளாக போதைப்பொருள் மாபியா நடத்தி வந்த ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு அல்லாமல்,
அவனுக்கு திமுகவில் கட்சி அங்கீகாரமும் அளித்த முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும்,அவரது சமுகவலைதள பக்கத்தில் பதிவிட்டு பின்பு டெலிட் செய்யப்பட்ட பதிவுகளில் இருந்தே ஜாபர் சாதிக்குடன் நெருக்கம் காட்டியது தெரியவருவதாலும்,அதை சார்ந்த செய்திகள் தொடர்ந்து வெளிவருவதாலும், தார்மீக பொறுப்பேற்று இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்