Asianet News TamilAsianet News Tamil

அன்னிய செலாவணி முறைகேடு வழக்கு - கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

enforcemnet notice to karthi chidambaram
enforcemnet notice-to-karthi-chidambaram
Author
First Published Apr 17, 2017, 4:39 PM IST


பங்குச்சந்தை மற்றும் அன்னிய செலாவணி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பங்குச்சந்தையில் ரூ.45 கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

மேலும் 2 ஆயிரத்து 262 கோடி அன்னிய செலாவணி மோசடி செய்துள்ளதாக ஹெல்த்கேர் நிறுவனம் மீதும் வழக்கு பதிவு செய்தது.

enforcemnet notice-to-karthi-chidambaram

இதுகுறித்து சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு, வாசன் ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் அவர்களுக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இதுதொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த அமலாக்கத் துறை கார்த்தி சிதம்பரம் மற்றும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்கும்படி அதில் கூறியுள்ளது. மேலும், அட்வான்டேஜ் ஸ்ட்ரேடிஜிக் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

enforcemnet notice-to-karthi-chidambaram

அமலாக்கத் துறை அனுப்பியிருக்கும் அந்த நோட்டீசில், பங்குகள் விற்பனை செய்ததில் அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டம் மீறப்பட்டிருப்பதாகவும், பங்கு பரிமாற்றங்களின் இறுதியில் கார்த்தி சிதம்பரம் பயனடைந்ததுபோல் தோன்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios