கொரோனா பாதிப்பால் ஊழியர்களின் சம்பளத்தை பல நிறுவனங்கள் பிடித்தம் செய்தன. அதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அதற்கான அரசாணை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இருப்பினும் இந்த ஊரடங்கு காலங்களில் நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமால் முழு ஊதியத்தை அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. 

இந்நிலையில் தற்போது அந்த அரசாணை திரும்ப பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் ஊரடங்கு காரணமாக தனியார் நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், அதனை காரணம் காட்டி ஊழியர்களுக்கு வாங்கும் சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என அரசு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 17 வரை மட்டுமே, அதாவது இந்த 54 நாட்களுக்குப் பிறகு அரசாணையானது திரும்பப் பெறப்பட்டு விட்டது. அதன் பின்னர் பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்க வேண்டியது அவசியமில்லை என அதில் தெரிவித்துள்ளது.