மத்திய அரசை குறைசொல்லுவதை வழக்கமாக வைத்திருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவருடைய தொகுதிக்குள் மல்லப்புரம் பகுதியில் நடந்த யானை கொலைக்கு வாய் திறக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி.

தன்னை வெடிமருத்து வைத்து கொன்றவர்களை ஒன்றுமே செய்யாமல் மனிதனின் புத்தி கேவலமானது என்று நினைத்து தன்னைத்தானே தண்ணீருக்குள் சென்று உயிரை விட்ட யானை இன்று உலக அரங்கில் உயர்ந்த இடத்தை பிடித்திருக்கிறது. ஆறுஅறிவுள்ள ஈனப்பிறவி மக்கள் தலை குனிந்து தன்மானத்தை இழந்து கூனி குறுகி நிற்கிறார்கள். நிச்சயமாக இப்படியொரு பாதகமான செயலை செய்தவனுக்கு தண்டனை யானைக்கு நிகழ்ந்ததைப்போல் கொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோபமாக கொப்பளித்துக்கொண்டிருக்கிறது.

கேரள மாநிலம். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான கர்ப்பிணி யானைக்கு அன்னாச்சி பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்தியஅமைச்சரும் விலங்குகள் நல உரிமை அமைப்பினைச் சேர்ந்தவருமான மேனகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேனகாகாந்தி அளித்த பேட்டியில், கர்ப்பிணியானை கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்று கேரள வனத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்ய் வேண்டும். வன அலுவலர்கள் அனைவரும் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சம்பவம் நடந்த மலப்புரம் வயநாடு மக்களவை தொகுதிக்குள் உள்ளது. அந்த தொகுதி "காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் இது தொடர்பாக வாய் திறக்காமல் உள்ளார். மவுனம் காத்து வருகிறார். மத்திய அரசை குறை கூறுவதில் கவனம் செலுத்தும் ராகுல்காந்தி தனது சொந்த தொகுதியில் நடந்துள்ள பிரச்சினையை எப்படி தீர்ப்பார் என்று தெரியவில்லை". என்றார்.
 
கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் தான் வனவிலங்கு வேட்டையாடுதல் அதிகமாக நடக்கிறது இதுவரையாரும் தண்டிக்கப்படவில்லை, 600 யானைகள் கொல்லப்பட்டுள்ளதில் என்ன நடவடிக்கை எடுத்தது கேரள அரசு என்று மேனகா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

யானைக்கு நாட்டுவெடிகுண்டு வைக்க வேண்டும் என்று வைக்கவில்லை. அந்த பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் அந்த பன்றிகளுக்காக வைக்கப்பட்ட அன்னாசி பழம் வெடிகுண்டை யானை தவறுதலாக சாப்பிட்டு விட்டது. அதனால் தான் இதுபோன்ற கொடூரமாக சம்பவம் நடந்துள்ளது என்று ஒருதரப்பு தற்போது நியாயம் பேசி வருகிறது.