புதுச்சேரி மாநிலத்தில் திடீர் என மன் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டதாக புதுச்சேரி மின்சார வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ.1.10-லிருந்து, ரூ.1.30-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் .,1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இது தொடர்பாக  புதுச்சேரி மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், : வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் 100 யூனிட் வரை ரூ.1.10-லிருந்து 20 பைசா உயர்ந்து ரூ.1.30-ஆகவும், 201 - 300 யூனிட் வரை ரூ.3.50-லிருந்து 45 பைசா உயர்ந்து ரூ.3.95-ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூ.4.60-லிருந்து 50 பைசா உயர்ந்து ரூ.5.10-ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.வர்த்தக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் 100 யூனிட் வரை ரூ.4.90-லிருந்து 25 பைசா உயர்ந்து ரூ.5.15-ஆகவும், 101 - 250 யூனிட் வரை ரூ.5.60-லிருந்து 55 பைசா உயர்ந்து ரூ.6.15-ஆகவும், 250 யூனிட்டுக்கு மேல் ரூ.6.25-லிருந்து 60 பைசா உயர்த்தப்பட்டு ரூ.6.85-ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திடீர் மின் கட்டண உயர்வு புதுச்சேரி மக்களுக்கு பெரிய ஷாக்காக அமைந்துள்ளது.