மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி நிறுவனம் பாரிவேந்தர் அந்தத் தொகுதியில் ரூ.150 கோடி ரூபாயை வாரி இரைத்து சாதனை படைத்துள்ளார். 

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் பணத்தை தண்ணீராய் அள்ளித் தெளித்து திக்குமுக்காட வைத்து விட்டன தமிழக கட்சிகள்.  
அதிமுக அதிகபட்சமாக ரூ2,400 கோடி செலவு செய்துள்ளதாக தகவக்ல் வெளியாகி உள்ளது. திமுக ரூ800 கோடியும் அமமுக ரூ300 கோடி ரூபாயையும் அள்ளித் தெளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

தேர்தல் பறக்கும் படை, தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளையும் தாண்டி பட்டவர்த்தனமாகவே பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட பாரிவேந்தர் அதிகபட்சமாக ரூ150 கோடி செலவழித்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் பாரிவேந்தர் ஒரு தொகுதியில் இறைத்த பணத்தை டி.டி.வி.தினகரன் இரு மடங்காக அதாவது ரூ.300 கோடி பணத்தை மட்டுமே 40 தொகுதிகளுக்கும் செலவளித்துள்ளது.  

துணை முதல்வர் ஓபிஎஸ் தனது மகன் ரவிந்திரநாத் வெற்றிபெற ரூ120 கோடியும், தயாநிதி மாறன் ரூ50 கோடி, ஜெகத்ரட்சகன் ரூ50 கோடி, நயினார் நாகேந்திரன் ரூ50 கோடி, பொன். ராதாகிருஷ்ணன், வசந்தகுமார் ரூ50 கோடி, அன்புமணி ரூ60 கோடி, பழனியப்பன் ரு15 கோடி செலவழித்துள்ளனர். அதிமுக, திமுக கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதிகளிலும் குறைந்த பட்சம் ரூ.30 கோடி முதல் அதிகபட்சமாக ரூ.150 கோடி வரை செலவழித்துள்ளனர்.