நின்னா சூரியன்ல நில்லு... இல்லேன்னா கேட்டுக்கு வெளியில நில்லு... அதட்டும் தி.மு.க... அடங்காத திருமா...!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் Tag Line தெரியும்தானே...’அடங்கமறு! அத்துமீறு! திருப்பி அடி!’ என்பதுதான். சாதீய சர்வாதிகாரத்துக்கு எதிராக தான் உருவாக்கிய இந்த அதிரடி ஸ்லோகனை ஸ்டாலினுக்கு எதிராக பயன்படுத்தி, தி.மு.க.வை அதிரவைத்துக் கொண்டிருக்கிறார். அதெவேளையில் கொஞ்சமும் சளைக்காமல் அவருக்கு நெருக்கடி கொடுத்து, அழுத்தி அமுக்கும் வேலையை ஸ்டாலினும் செய்து கொண்டிருக்கிறார். 

Election symbols...thirumavalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் Tag Line தெரியும்தானே...’அடங்கமறு! அத்துமீறு! திருப்பி அடி!’ என்பதுதான். சாதீய சர்வாதிகாரத்துக்கு எதிராக தான் உருவாக்கிய இந்த அதிரடி ஸ்லோகனை ஸ்டாலினுக்கு எதிராக பயன்படுத்தி, தி.மு.க.வை அதிரவைத்துக் கொண்டிருக்கிறார். அதெவேளையில் கொஞ்சமும் சளைக்காமல் அவருக்கு நெருக்கடி கொடுத்து, அழுத்தி அமுக்கும் வேலையை ஸ்டாலினும் செய்து கொண்டிருக்கிறார். 

தி.மு.க.கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.வுக்கு ஒன்றே ஒன்றுதான். இந்நிலையில், இவர்கள் இருவரையும் தங்களது ‘உதயசூரியன் சின்னத்தில்’ போட்டியிடும்படி தி.மு.க. தலைமை கேட்டுக் கொண்டிருக்கிறது. இது ஜெயலலிதா ஸ்டைல் அரசியல். ஸ்டாலின் இதை செய்யக் காரணம்...’வெற்றி பெற்றுவிட்டால், இவங்க அதுக்குப் பிறகு வேறு முடிவெடுத்தாலும் எடுப்பாங்க. Election symbols...thirumavalavan

அதனால இவங்கள கைக்குள்ளேயே வெச்சுக்க ஒரே வழி, நம்ம சின்னத்தில் போட்டியிட வைக்கிறதுதான். ’ என்று ஸ்டாலினிடம் துரைமுருகன் தூபம் போட்டதன் விளைவுதான் இது. கூட்டணி ஆலோசனையின் போதே வி.சி.க. மற்றும் ம.தி.மு.க. இருவரிடமு இந்த நிபந்தனையை சொல்லிவிட்டுதான் பேச்சை துவக்கினார்களாம் தி.மு.க.வினர். சீட் ஒதுக்கியபோதும் இதை சொல்லியுள்ளனர். ஆனால் இப்போது ‘எங்களை எங்களுக்கு விருப்பமான சின்னத்தில் போட்டியிட அனுமதியுங்கள்.’ என்று தொடர்ந்து வலியுறுத்துகிறாராம் திருமா. Election symbols...thirumavalavan

ஆனால் ஸ்டாலின் இறங்கி வருவதாக இல்லை. சமீபத்தில் திருமா சார்பாக வி.சி.க.வின் சில நிர்வாகிகள் அறிவாலயம் சென்று பேசியபோது ஸ்டாலின் சார்பாக பேசிய அக்கட்சி முக்கியபுள்ளிகள் நிறுவர் ”நிபந்தனையை ஏத்துக்கிட்டுதானே கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உட்கார்ந்தீங்க. ஒரு ஒப்பந்தம் போடுறப்ப ரெண்டு ஏத்துக்கிட்டு வந்துட்டா பிறகு கடைசியில பின்வாங்க கூடாது. உதயசூரியன் சின்னத்தை ஏத்துக்கிட்டு அதுல நில்லுங்க தோழா. உங்களோட கொள்கைக்கு இது ஒத்து வர்லேன்னா விட்டுடுங்க. நண்பர்களா பிரிஞ்சுடுவோம்!” என்று அதிர வைத்துள்ளனர். Election symbols...thirumavalavan

புலம்பியபடி வெளியே வந்த சிறுத்தைகள் ‘நின்னா சூரியன்ல நில்லு. இல்லேன்னா அறிவாலயத்துக்கு வெளியில நின்னுன்னு சொல்றது என்ன பெரிய மனுஷ அரசியல்.’ என்று திருமாவுக்கே போன் போட்டு சொல்லியிருக்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios