5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்த உள்ளதாக இந்திய தேர்தல் தலைமை ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, அவர் 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

5 மாநிலங்களிலும் சுதந்திரமான வகையில் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் முழுமையாக வாக்களிக்க வேண்டும். ஜனவரி 11ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படுகிறது.

இதை தொடர்ந்து கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 4ம் தேதி தேதி தேர்தல் நடைபெறும். உத்தரகண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 15ம் தேதி நடைபெறும். மணிப்பூரில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதில், மார்ச் 4 மற்றும் 8ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக நடக்கிறது. அதில் பிப்ரவரி 11, 15, 19, 23, 27ம் தேதி வரை 5 கட்டமாகவும், 6ம் கட்டம் மார்ச் 4, 7ம் கட்டமாக 8ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 11ம் தேதி நடத்தப்படும். அன்றைய தினமே அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அவர்தெரிவித்தார்.