பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் தற்போது சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தலானது நடைபெறுகிறது. இதற்கான வாக்கு பதிவு வரும் 19-தேதி நடை பெறுவதால் கடந்த 20-நாட்கள் இத்தொதிகளில் தேர்தல் பிரசாரமானது சூடி பிடித்தது. 

ஒவ்வொரு கட்சியினரும் இந்த நான்கு தொகுதிக்கு பொறுப்பாளர்களை நியமித்தனர். அதுபோக வெளியூரில் இருந்து அனைத்து கட்சி நிர்வாகிகளும் தங்கி பிரச்சாரத்தை நடத்தி மக்களிடம் வாக்கு கேட்கிறார்கள். முக்கியமாக ஆளும் கட்சியான அ.தி.மு.கவிற்கு இது வாழ்வா? சாவா? போராட்டமாக பார்க்கப்படுகிறது. 

றால் தற்போது கையில் அ.தி.மு.க இந்த இடைதேர்தல்களில் தோற் இருக்கும் ஆட்சியானது தி.மு.கவிற்கு போய்விடும். இதனால் இந்த நான்கு தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென வேட்பாளர்கள் தேர்வில் இருந்து பணப்பட்டுவாடா வரை பார்த்து செய்தனர் அ.தி.மு.க, தி.மு.கவினர். இதற்கிடையில் அ.தி.மு.கவை வீழ்த்த கட்சி தொடங்கியிருக்கும் டி.டி.வி தினகரன் கட்சியான அ.ம.மு.கவும் இந்த இரு கட்சிகளுக்கு இணையாக வேட்பாளர்களை தேர்வு செய்தும், பணத்தையும் வாரி இறைத்தது.

 தன்னுடைய பலத்தை காமித்திருக்கிறது. இதனால் திருப்பரங்குன்றம்,சூலூர்,அரவக்குறிச்சி,ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் ஓட்டுகள் சிதறும் சூழல் கூட உருவானது. இச்சூழலால் தற்போது பிரச்சாரம் செய்த வரை ஓட்டப்பிடாரம் தவிர மற்ற தொகுதிகளில் தி.மு.க விற்கு சாதகமாக இருப்பதாக அ.தி.மு.க பின்னடைவை சந்திக்கப் போவதாகவும் உளவுத்துறையிடம் இருந்து ரகசியமும் கசிய ஆரம்பித்திருக்கிறது. 

மேலும் தேர்தல் ஆணையம் கொடுத்த பிரச்சார நாட்களானது இன்று மாலையுடன் முடிந்ததால் இடைத்தேர்தல் பொறுப்பாளர்களான அமைச்சர்கள், வெளியூர் கட்சி நிர்வாகிகள் தாங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டி கொண்டு சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.