electiom commission secretary need to appear said high court
ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக வழக்கில் தேர்தல் ஆணைய செயலாளர் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் இருக்கும் தருவாயில் அமைச்சர்கள் பலர் ஜெ வை நாங்கள் நேரில் பார்க்கவே இல்லை என தெரிவித்து வருகின்றனர்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, திமுக சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்த சரவணன் தொடர்ந்த வழக்கில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது
இது தொடர்பாக அக்டோபர் 6 ஆம் தேதி, தேர்தல் ஆணைய செயலாளர் நேரில் ஆஜராகி ஜெயலலிதா கைரேகை உண்மைதானா என விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஏற்கனவே விளக்கம் அளித்த நிலையில், தற்போது தேர்தல் ஆணைய செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
