egmore court give due date for dinakaran

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குறுக்கு விசாரணை செய்ய தினகரன் தரப்புக்கு அவகாசம் வழங்கி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து தொலைகாட்சி மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் வாங்கியதி மொசடி செய்ததாக சசிகலா, டிடிவி தினகரன், அவரது உறவினர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக ஏழு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இரண்டு வழக்குகளில் இருந்து டிடிவியை நீதிமன்றம் விடுவித்தது. அதன்படி இன்னும் ஐந்து வழக்குகள் தினகரன் மீது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்த வழக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் குற்றம் சாட்டப்பட்டோரை விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைதொடர்ந்து நேற்று சசிகலா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காணொளி கட்சி மூலம் ஆஜராகினர். மேலும் அவரது உறவினர் பாஸ்கரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

ஆனால் டிடிவி தினகரன் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து சசிகலா மீதான மறு விசாரணையை ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குறுக்கு விசாரணை செய்ய ஜூன் 29 ஆம் வரை கால அவகாசம் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.