பாஜக சட்டவிதிகளின்படி ஒருவக்கு 75 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் அரசுப் பொறுப்புகளில் இருக்க  முடியாது. அதன்படிதான் மூத்த தலைவராக இருந்தாலும் அத்வானிக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டது. 

இந்நிலையில்தான் கர்நாடக மாநில முதலமைச்சராக எடியூரப்பா மீண்டும் நேற்று பொறுப்போற்றுள்ளார். ஆனால் அவருக்கு 75 வயுதிற்கு மேல் ஆகிவிட்டதால் அவரால் முதலமைச்சராக முடியாது என பேசப்பட்டது. பாஜக விதிகளின்படி  வேறு யாராவது முதலமைச்சராக்கப்படுவார்கள் என தகவல் வெளியானது.

ஆனால் எடியூரப்பா எந்தவிதமான தடங்களும் இன்றி முதலமைச்சராக்கப்பட்டார். ஆனால் மேஜிக் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகாவத்தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கர்நாடக முதலமைச்சராக  எடியூரப்பா பதவியேற்க அவரது வயது தடையாக இருந்தது.. அதனால் பாஜக அமைப்பு விதிகளின்படி அவர் பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகாவத் கன்னியாகுமரிக்கு வந்திருந்தார். கர்நாடகாவில் ஏற்பட்ட நெருக்கடி குறித்து  பெங்களூருவில் இருந்து ஆர்.எஸ்.எஸ். குழு ஒன்று குமரி வந்து மோகன் பகவத்தை சந்தித்தது. 

இந்த சந்திப்பின்போது கர்நாடக அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, எடியூரப்பாவுக்காக அந்த விதி தளர்த்தப்பட்டு அவர் முதலமைச்சராக  பதவியேற்பதற்கு அனுமதியளித்திருக்கிறார் மோகன் பகவத் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.