நாகரீகமின்றி கீழ்த்தரமாக சமூகவலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருவதாக தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி மீது கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. 

உதயநிதி ஸ்டாலின் தி.மு.க., இளைஞரணி செயலாளர் பதவியேற்றது முதல் ட்விட்டரில் துள்ளி விளையாடுகிறார். அவரது டுவீட்கள் அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. அவர் போடும் கீழ்த்தரமான பதிவுகளை திமுகவினர் மெச்சி வருகின்றனர். அவரது தாத்தா கருணாநிதியின் இலக்கிய நடை பேரனுக்கு இருப்பதாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க., முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து, சமரச முயற்சிகள் குறித்து கிண்டலடித்து வந்தார். இந்நிலையில் அ.தி.மு.க., வெற்றிகரமாக முதல்வர் வேட்பாளரை புதனன்று அறிவித்துவிட்டது.

 

இதனை அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். இதனை திமுகவினரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த நிலையில் வெள்ளை வேட்டி, சட்டையுடன் ஒருவர் காலில் விழுந்து கும்பிடும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள உதயநிதி, “டெட்பாடி போல் விழுந்து கிடக்கும் இந்த மானஸ்தன் யார்?”என முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை டேக் செய்துள்ளார். 

இவரின் இந்த பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சாமானியன் கிளைச் செயலாளர் முதல் முதலமைச்சர் வரை வந்தவர் எங்கள் எடப்பாடி யார் அவரை சொல்வதற்கு உங்களுக்கு எவ்வாறு மனம் வருகிறது. உங்கள் குடும்ப நலம் ஒன்றே குல நலம் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தை மாற்றி அண்ணாவின் பெயரை அவப்பெயர் ஆக மாற்றியவர்கள் நீங்கள் உங்கள் குடும்பம்.

 

உதய் அவர்களே இது எல்லாருக்கும் தெரிஞ்ச கதையை நீசொல்லி தான் தெரியணும்னா கிடையாது மக்களுக்கு வருங்காலங்களில் நீங்கள் என்ன செய்யப்போகிறார் என்று சொல்லுங்கள் மக்களுக்கு கீழ்த்தரமான அரசியல் செய்ய வேண்டாம் உங்களுடைய நல்ல விஷயங்களை சொல்லி மக்களிடம் ஓட்டு கேளுங்கள். நீங்கள் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டபோது,  உங்கள் அப்பாவின்  இடத்தை நிரப்புவீர்கள் என எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நீங்களோ தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் இடங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். 71 ஆண்டு இயக்கத்தின் பரிதாப நில. 

அதிமுகவில் கூட முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அதிமுக வின் தொண்டர்களுக்கு உண்டு என்பதை தற்போது நிரூபித்து விட்டனர். ஆனால், திமுக தொண்டனுக்கு கடைசிவரை கட்டுமர வாரிசுகளுக்கு கொத்தடிமை வேலை தான் செய்யனும் போல என பதிலடி கொடுத்துள்ளனர். 

 

ஒருவர் “ஆக ஆகன்னு உங்களுக்கு நான்கு வருடம் பைத்தியம் பிடிக்க வைத்ததே இவர்கள் தான்”என பதிலடி தந்துள்ளார். இன்னொருவர் “கொஞ்சமாவது நாகரிகமாக பேச பழகி கொள்ளுங்க. கலைஞரின் வழி வந்தவர்கள் அல்லவா நீங்கள்”என கிண்டலாக கூறியுள்ளார். "கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு எடப்பாடி பழனிசாமியின் கையை பிடித்து கெஞ்சினேன், ஆனாலும் அவர் மறுத்துவிட்டார்" என ஸ்டாலின் முன்னர் கூறிய செய்தியை ஒருவர் பகிர்ந்துள்ளார். தி.மு.க.,வினர் உதயநிதிக்கு கருத்துக்கு ஆதரவாக இ.பி.எஸ் .,மற்றும் ஓ.பி.எஸ்ஸை விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கும் அ.தி.மு.க.,வினர் பதிலடி தருகின்றனர்.