கொரோனா வேகமாக பரவி வருவதால் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள மற்ற மாநில முதல்வர்களும், அமைச்சர்களும், ஏன் எதிர்கட்ச்சி தலைவர்கள் கூட வீடியோ காலில் பேசி விவரங்களை கேட்டு வர தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி அச்சப்படாமல் பல இடங்களுக்கு நேரில் சென்று சோதனை நடத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கி இறங்கி அடித்து வருகிறார். 

கடந்த சில தினங்களுக்கு முன் அரசு மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த எடப்பாடி பழனிசாமி அங்குள்ள மருத்துவ ஏற்பாடுகளை சோதனையிட்டார். அம்மா உணவகத்துக்கு அதிகாலை சென்று சோதனையிட்ட அவர், சரியான தரத்தில் மக்களுக்கு உணவுகள் வழங்கப்படுகிறதா? என விசாரித்ததோடு அங்கு சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு தரம் பார்த்தார். இந்நிலையில் 

வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் முகாம்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எஸ்.பி.வேலுமணியும் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அந்த தொழிலாளர்களுக்கு உணவு, உடைகளை முதல்வர் வழங்கினார். வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடங்களுக்கு இன்று மதியம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று அந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கினார்.

முதலாவதாக முதலமைச்சர் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கினார். அவர்களிடம் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று கேட்டறிந்தார்.

 அங்கிருந்த அதிகாரிகளிடம் இவர்களுக்கு தொடர்ந்து நல்ல முறையில் உணவு மற்றும் தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை பெரியமேடு கண்ணப்பர் திடலில் அமைந்துள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கினார்.பிறகு வேளச்சேரி முகாமுக்கு சென்று அங்கிருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு, உடைகளை முதல்வர் வழங்கினார்.

முதல்வர் நினைத்தால் அவர்களுக்கு உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு இருந்த இடத்தில் இருந்தே கட்டளையிட்டு இருக்க முடியும். என்ன தான் முதல்வராக இருந்தாலும் அவரும் ஒரு மனிதர் தானே. உலகமே கொரோனாவால் முடங்கிக் கொடக்கும்போது அவர்களுக்கும் உயிர்ப்பயம் ஏற்படுவது இயல்பு தான். ஆனால், அவற்றை பற்றிய கவலை இல்லாமல் மக்களுக்கு உதவிகள் சென்று சேர்கிறதா? என அவர்களின் நலனில் அக்கறை கொண்டு ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் சென்று அமைச்சர்களுடன் இறங்கி அடித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவரது செயல்பாடுகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.