தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை இருந்த இபிஎஸ் தற்போது  அமெரிக்காவில் உள்ளார்..

அமெரிக்காவில் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 19 நிறுவனங்கள் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் அமெரிக்க  முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வசதியாக யாதும் ஊரே என்ற திட்டத்தை செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்கி வைத்தார். 

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அமெரிக்க பயணம் நாளையுடன் முடிவடைகிறது. அடுத்து 8, 9 ஆகிய தேதிகளில் அவர் துபாய் செல்வதாக பிளான் உள்ளது.பின்னர் 10 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.

இந்த நிலையில் எடப்பாடியின்  பயணத் திட்டத்தில் ஒரு சில மாற்றம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நாளை  அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பி விட்டு  பின்னர் மீண்டும் சென்னையிலிருந்து மீண்டும் துபாய் செல்லலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகள்  உள்ளிட்டவைகள் குறித்து ஒரு நாள் சென்னை வந்து ஆண்வு செய்துவிட்டு பின்னர் துபாய் செய்யலவும் இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இநநிலையில் திட்டமிட்டபடி 10 ஆம் தேதி சென்னை திரும்புவதா அல்லது இடையில் ஒருமுறை சென்னைக்கு வந்துவிட்டு  மீண்டும் பயணத்தைத் தொடர்வதா என்ற  ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.