மரக்கடை பகுதியில் விஜய் மக்களிடையே பேச தொடங்கியதும் அவ்வழியே திடீரென ஆம்புலன்ஸ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தவெக தொண்டர்கள் வழிவிட்டதால் ஆம்புலன்ஸ் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றது.
திருச்சியில் முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை துவங்கிய விஜய், ‘‘திருச்சில தொடங்கினா திருப்புமுனையா அமையும்.
1956ல் அறிஞர் அண்ணா போட்டியிட நினைத்த இடம், 1974ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாநாடு என பல வரலாறுகளை கொண்டது திருச்சி. அடுத்த ஆண்டு நடைபெறுவது ஜனநாயக போர்; குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன். பேருந்துகளில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி, ஓசி என சொல்லிக் காட்டுகிறார்கள்.
தவெக ஆட்சி அமைந்தால் நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே நாங்கள் செயல்படுத்துவோம்” என பரப்புரை செய்து கொண்டு இருக்கும்போது ஸ்பீக்கர் வேலை செய்யாததால் பேச்சை முடித்துக் கொண்டார் விஜய். பகல் 3 மணிக்கு தனது பேச்சை தொடங்கி த.வெ.க தலைவர் விஜய், சரியாக 19 நிமிடங்களில், 3.19க்கு தனது பேச்சை நிறைவு செய்துக்கொண்டார். திமுக அரசின் வாக்குறுதிகள், கல்விக்கடன், விவசாய திட்டங்கள் குறித்து விஜய் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

மரக்கடை பகுதியில் விஜய் மக்களிடையே பேச தொடங்கியதும் அவ்வழியே திடீரென ஆம்புலன்ஸ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தவெக தொண்டர்கள் வழிவிட்டதால் ஆம்புலன்ஸ் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றது. ஏற்கெனவே கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் வழி விடவேண்டும் என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார் விஜய். முன்னதாக இ.பி.எஸ். பிரசார பயணத்தில் ஆம்புலன்ஸ் அவ்வழியே வந்தது சர்ச்சையானது.
கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு 108 ஆம்புலன்ஸ் சைரன் அடித்து கூட்டத்தின் மத்தியில் நுழைந்தது. இதனால் கோபமடைந்த இபிஎஸ், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கடுமையாக எச்சரித்து பேசினார். ஆம்புலன்ஸில் நோயாளி இருக்கிறார்களா?" என்று கேட்டு, உள்ளே சோதித்ததில் நோயாளி இல்லை எனத் தெரிந்தது. கோபத்தில், "யே, வண்டிய நிறுத்துயா! யாரும் அடிக்காதீங்க!" என்று கத்தி, "நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் வந்தால் இனி ஓட்டுநர் பேஷண்ட் ஆகிவிடுவார்" என எச்சரித்தார்.

இந்த சம்பவத்தை திமுக அரசின் திட்டமிட்ட சதி எனக்கூறி "இந்த அரசு வேண்டுமென்றே ஆளில்லாத ஆம்புலன்ஸை அனுப்பி கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளது" என்று குற்றம்சாட்டினார். அதிமுகவினர் விசில் அடித்து ஆதரவு தெரிவித்தனர்.
இபிஎஸின் இந்தப் பேச்சு ஆம்புலன்ஸ் பணியாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இதற்கு புகார் அளித்தார். இந்நிலையில் அதிமுக கூட்டத்தை போன்றே விஜய் பேசிய இடத்திலும் ஆம்புலன்ஸ் வந்தது திமுகவின் சதி என்கிறார்கள் தவெக தொண்டர்கள்.
