edappadi pressmeet on stalin protest

தமிழகம் முழுவதும் 30 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1519 குடிமராமத்துப் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காஞ்சிபுரம் மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்துப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்,

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி நிலவி வருவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள் மூலம்,கண்மாய்களை தூர் வாருதல், மதகுகளை சீரமைத்தல்,கரைகளை பலப்படுத்துதல் போன்ற வேலைகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

நீர்நிலைகளில் குடிநீரை சேமிப்பது, ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்றவையே குடிமராமத்துப் பணிகளின் முக்கிய நோக்கம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்,

தற்போது 100 கோடி ரூபாய் செலவில் இந்த குடிமராமத்துப் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவதால், விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறுவார்கள் என்றும் இந்த அரசு விவசாயிகளுக்கன அரசு என்றும் அவர் பேசினார்.

விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய EPS, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதாவும், ஸ்டாலின் தேவையில்லாமல் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரவித்தார்.