Asianet News TamilAsianet News Tamil

திமுகவின் ராஜாக்களும், ராஜ்யங்களும்! பிரச்சாரத்தில் வெளுத்து வாங்கிய முதல்வர்

திமுக ஆட்சியை பிடித்தால் பல முதலமைச்சர்கள் இருப்பார்கள் என்று பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்,ஸ்டாலின்,உதயநிதி, கனிமொழி,தயாநிதி மாறன் என்று பல முதல்வர்கள் உருவெடுப்பார்கள் என முதல்வர் ஈ.பி.எஸ் சாடினார். 

edappadi palaniswami slams dmk nepotism in tamil nadu politics
Author
Chennai, First Published Apr 1, 2021, 9:32 PM IST

திமுக ஆட்சியை பிடித்தால் பல முதலமைச்சர்கள் இருப்பார்கள் என்று பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்,ஸ்டாலின்,உதயநிதி, கனிமொழி,தயாநிதி மாறன் என்று பல முதல்வர்கள் உருவெடுப்பார்கள் என முதல்வர் ஈ.பி.எஸ் சாடினார். கட்சிக்குள் இருக்கும் ராஜாக்களின் பட்டியல் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களா இருப்பது தெரிகிறது. தி.மு.கவை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்களே குட்டி ராஜ்ஜியங்கள் நடத்தி வந்தனர். அமைச்சர்களை விட அதிகாரம் படைத்தர்களாக திமுகவின் மாவட்ட செயலாளர்கள் வலம் வந்தனர். இதை மிஞ்சிடும் வகையில் தற்போது திமுகவில் குட்டி ராஜாக்கள் வலம் வருகின்றனர். ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்களே இந்த குட்டி ராஜாக்களாக திமுகவை ஆக்கிரமித்துள்ளனர் என முதல்வர் குற்றம்சாட்டினார்.

edappadi palaniswami slams dmk nepotism in tamil nadu politics

கருணாநிதியின் மகளான கனிமொழி தனக்கென ஒரு கூட்டத்தை கட்சிக்குள் உருவாக்கி வைத்துள்ளார். நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், ஸ்டாலினுக்கு பின் கட்சியை தன் வசப்படுத்திக் கொண்டு அதன் மூலம் தமிகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தென் மாவட்டங்களை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார் கனிமொழி. தென் மாவட்டத்திலிருந்து எம்.பியாக போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

edappadi palaniswami slams dmk nepotism in tamil nadu politics

இதன் மூலம் திமுகவின் தென் மாவட்டங்களுக்கான முதலமைச்சராகவே உலா வருகிறார் கனிமொழி. எங்கு கனிமொழி கட்சியில் தன்னை மீறி கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவாரோ என்ற எண்ணத்தில், அவசர அவசரமாக ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்கு பதவி வழங்கி தேர்தலில் வேட்பாளராகவும் களம் இறக்கப்பட்டுள்ளார். கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற இருமாப்புடன் சுற்றி வரும் உதயநிதி ஸ்டாலின் கட்சிக்குள் தனக்கென ஒரு ராஜாங்கத்தை உருவாக்கி கொண்டுள்ளார். உதயநிதி தனக்கு  நெருக்கமானவர்களுக்கு கட்சி பதவிகளை கொடுத்து தனது ராஜாங்கத்தின் அங்கத்தினர்களாக வைத்துக் கொண்டுள்ளார். அன்பில் மகேஷ், டி.ஆர். பி ராஜா உள்ளிட்டவர்களுக்கு தற்போது போட்டியிட வாய்ப்பையும் பெற்று தந்துள்ளார் உதயநிதி. 

edappadi palaniswami slams dmk nepotism in tamil nadu politics

ஒரு புறம் கருணாநிதியின் வாரிசுகள் திமுகவை ஆக்கிரமித்துள்ள நிலையில் மறுபுறம் திமுகவின் மூளையாக செயல்பட்ட முரசொலி மாறனின் வாரிசு தயாநிதி மாறன், கட்சி என்ற குடும்ப சொத்தில் எனக்கும் பங்கு உள்ளது என்று அவரும் ஒரு ராஜியத்தை உருவாக்கியுள்ளார். பணபலம் படைத்த மாறன் சகோதரர்கள் திமுகவினரை விலைக்கு வாங்கி திமுகவின் நிர்வாகிகளை தங்கள் பக்கம் வைத்துள்ளனர்.

தினகரன் அலுவலகம் எரிப்பு சம்பவத்தை அடுத்து கருணாநிதி மற்றும் முரசொலிமாறன் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மனகசப்பு சம்பவத்தில் இருந்து தயாநிதி மாறன் உஷாராக காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்களே கட்சியை பிடிக்க திட்டமிட்டு வருகின்றனர், திமுக ஆட்சியை பிடித்தால் இந்த குட்டி ராஜாக்கள் குட்டி முதலமைச்சர்களாக வலம் வருவார்கள் என்பது நிதர்சனம். சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படும் நிலையில் ஸ்டாலினை வீட்டில் உட்கார வைத்துவிட்டு இந்த குட்டி ராஜாக்களில் ஒருவர் கட்சியை கைப்பற்றும் நிலை ஏற்படும் என்று திராவிட அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios