Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத ஊசிப் போன உணவு பொட்டளம்- எடப்பாடி பழனிசாமி விளாசல்

சட்டப்பேரவை மரபை கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து பேசி வரும் சபாநாயகர், பேரவை இருக்கை விவகாரத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுகவின் துணை தலைவர் இருக்கை தொடர்பாக ஏன் மரபை கடைப்பிடிக்க தவறிவிட்டார் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Edappadi Palaniswami has said that there is nothing in the Governor speech prepared by the Tamil Nadu government KAK
Author
First Published Feb 12, 2024, 2:32 PM IST

ஊசிப்போன உணவு பொட்டலம்

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டுத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி நிறைவடைந்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம், ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்.  இந்த  அரசுக்கும், சபாநாயருக்கும், ஆளுநருக்கும் என்ன பிரச்சனை இதை அவர்களிடத்தில் கேட்டால் தான் தெரியும் என்றார். சாவர்கர் குறித்து சபாயகர் பேசி இருக்கிறார்.

சபாநாயகர் அரசியல் சார்பு இல்லாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு தயாரித்துள்ள உரை என்பது உப்பு சப்பில்லாத ஊசிப் போன உணவு பொட்டளம் போன்றதாகவும், கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் எந்த மக்கள் நலத்திட்டமும் ஆளுநர் உரையில் இல்லை என்றார்.

Edappadi Palaniswami has said that there is nothing in the Governor speech prepared by the Tamil Nadu government KAK

ஓ.பன்னீர் செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கியது ஏன்.?

ஓ.பன்னீர் செல்வத்திற்கு  எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் சபாநாயகரிடம் கன்டிப்பாக முறையிடுவோம் என கூறியவர், மரபை கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து பேசி வரும் சபாநாயகர், பிரதான எதிர்கட்சியான அதிமுகவின் சார்பாக தேர்ந்தெடுக்கபட்ட எதிர்கட்சி துணை தலைவருக்கு ஏன் அந்த இருக்கையை கொடுக்க மறுக்கிறார்கள் என தெரியவில்லை என்றார். எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் நல்ல தீர்வை காண்பார் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார். 

கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க அதிமுக அரசு சரியான திட்டத்தை தான் போட்டது. ஆனால் ஆட்சி மாற்றதுக்கு பிறகு அதிமுக வின் திட்டத்தை முழுமையாக கொண்டு வந்து இருந்தால் பிரச்சனை ஏற்பட்டு இருக்காது. அமைச்சர் பிரசனைகளை மூடி மறைக்கிறார்.

Edappadi Palaniswami has said that there is nothing in the Governor speech prepared by the Tamil Nadu government KAK

கருணாநிதி பெயர் வைக்கவே அவசரமாக திறந்திருக்காங்க

கருணாநிதி  பெயர் வைப்பத்தற்காக அவசர அவசரமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தால் தான் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக அரசு உயர்மட்ட குழு அமைத்து, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், பொது மக்கள், பொது நலச் சங்கங்கள், பேருந்து உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டு கிளாம்பாக்கம் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

இதையும் படியுங்கள்

ஆளுநர் ரவி சட்டசபையில் உரையை வாசிக்காததும் வெளிநடப்பு செய்ததையும் நியாயப்படுத்த முடியாது- அன்புமணி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios