Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகளை நடுத் தெருவில் நிறுத்திய திமுக.! பொங்கல் பரிசாக முழு கரும்பும், 5000 ரூபாயும் வழங்கிடுக..!-இபிஎஸ்

 தைப் பொங்கலுக்கு 5,000/- ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
 

Edappadi Palaniswami has insisted on giving 5000 rupees and whole sugarcane as Pongal gift
Author
First Published Dec 23, 2022, 2:32 PM IST

பொங்கல் பரிசு தொகுப்பு- இபிஎஸ்

பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த உருப்படாத ஆட்சியாளர்கள், ஏழையின் வயிற்றில் அடிப்பது மட்டுமல்ல, ஏழைகளுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் நடுத் தெருவில் நிறுத்தி வருகிறார்கள். தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கில் மாண்புமிகு அம்மா ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் அரசிலும் பொங்கல் பரிசாக ரொக்கம் மற்றும் செங்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டு வந்தது. 

இனி இவர்கள் தான் டிவி விவாதங்களில் பங்கேற்பார்கள்.. பெயர் பட்டியலை வெளியிட்ட திமுக தலைமை..!

Edappadi Palaniswami has insisted on giving 5000 rupees and whole sugarcane as Pongal gift

பொங்கல் என்றாலை கரும்புதான்

இந்த விடியா திமுக அரசும், 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்குவார்கள் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.நேற்றைய தினம்(22.12.2022) இந்த விடியா திமுக அரசு, பொங்கல் தொகுப்பு குறித்து அறிவித்த அரசு செய்திக் குறிப்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000/- ரூபாய் ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தைப் பொங்கல் என்றாலே மக்களின் நினைவிற்கு வருவது செங்கரும்புதான். இந்த விடியா அரசின் அறிவிப்பில் செங்கரும்பு இடம் பெறாதது,

மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் கவனம் செலுத்திய ஸ்டாலின்..! மக்களை மறந்துவிட்டார்- அண்ணாமலை ஆவேசம்

Edappadi Palaniswami has insisted on giving 5000 rupees and whole sugarcane as Pongal gift

போராட்டத்தில் விவசாயிகள்

செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது. பொதுமக்களிடையே மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விவசாயிகளும், பொதுமக்களும் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழகமெங்கும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாக தற்போது ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Edappadi Palaniswami has insisted on giving 5000 rupees and whole sugarcane as Pongal gift

ரூ.5000 வழங்கிடுக

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று வாய் வீரம் காட்டும் முதலமைச்சர் அவர்கள், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, எங்களிடம் கேட்டபடி, இந்த அரசு தைப் பொங்கலுக்கு 5,000/- ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

நானும் கிறிஸ்தவன் தான்..! இத சொன்னா அவங்களுக்கு நல்லா எரியும்- பாஜகவினரை வெறுப்பேற்றும் உதயநிதி

Follow Us:
Download App:
  • android
  • ios