புதிய நிற பிரச்சார வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி..! திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன.?

எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தொண்டர்கள் சந்திக்கும் வகையில், தனது உடல் நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட புதிய வாகனத்திற்கு மாறியுள்ளார். நேற்று சேலம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய வகை வாகனம் இபிஎஸ் வந்தது  தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தது. 

Edappadi Palaniswami has bought a new campaign vehicle to meet volunteers across Tamil Nadu ahead of the parliamentary elections

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் இபிஎஸ்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக 4 பிரிவாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த சில நாட்களாக காலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால்  நீண்ட நேரம் காலை ஒரே இடத்தில் வைக்க முடியாத நிலையானது எடப்பாடி பழனிசாமிக்கு உருவானது. இதன் காரணமாக சேலத்திலேயே 20 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து ஓய்வு எடுத்து வந்தார்.

Edappadi Palaniswami has bought a new campaign vehicle to meet volunteers across Tamil Nadu ahead of the parliamentary elections

புதிய காருக்கு மாறிய எடப்பாடி

சென்னை வந்த அமித்ஷாவை பார்க்க கூட எடப்பாடி பழனிசாமியால் வர முடியாத நிலையில் இருந்தார். இதனையடுத்து நீண்ட நேர பயணங்களுக்கு எப்போதும் இன்னோவா மற்றும் டெம்போ டிராவலரை மட்டும் எடப்பாடி பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் அதில் கால் வைக்க குறுகிய இடமாக இருப்பதால் புதிய வகை காருக்கு மாற திட்டமிட்டார். இதனையடுத்து நேற்று சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எடப்பாடி பழனிசாமி force நிறுவனத்தின் urbania வகை வாகனத்தை பயன்படுத்தினார். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால், அதற்கு வசதியாக இந்த புதிய வாகனம் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

திமுக என்ற தீர்த்தம் செந்தில்பாலாஜி மீது தெளித்ததும் புனிதம் ஆகிவிட்டாரா?ஒரு கைதி தமிழகத்தின் அமைச்சரா?இபிஎஸ்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios