பருத்திக்கு 50ஆயிரம், பயிருக்கு 20ஆயிரம்..! மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடுக-இபிஎஸ்

கோடை மழையினால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள் போன்ற பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான நிவாரணத்தை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
 

Edappadi Palaniswami demands compensation for rain affected farmers

மழையால் பயிர்கள் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பெய்த கோடை மழையினால் பருத்தி, எள் மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பருத்தி மற்றும் எள் சாகுபடி செய்திருந்த நிலங்களில் மழை நீர் தேங்கி அப்பயிர்களின் வேர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பருத்தி மற்றும் எள் பயிரிட்டிருந்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு முழுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Edappadi Palaniswami demands compensation for rain affected farmers

பருத்தி, எள் பாதிப்பு

மேலும், புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், ஓரிரு நாட்களில் தமிழகத்தில் புயல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தமிழகம் முழுவதும், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக்கோடை மழையினால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி மற்றும் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த எள் போன்ற பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயப் பெருமக்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

 குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், வலங்கைமான், கூத்தாநல்லூர் என அனைத்து தாலுகாக்களிலும் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பருத்தி மற்றும் 10 ஆயிரம் ஏக்கரில் எள் பயிரிடப்பட்டு உள்ளதாகவும், பயிர்கள் நன்கு விளைந்து மகசூல் எடுக்க வேண்டிய நேரத்தில் கோடை மழையினால் பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் விவசாயிகளுக்கு முழுவதுமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன.

Edappadi Palaniswami demands compensation for rain affected farmers

 பாதிப்பை கணக்கெடுக்காத அதிகாரிகள்

மேலும், பருத்தி பயிர் இரண்டு மகசூல் தரக்கூடிய பயிராகும். இக்கோடை மழையினால் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளதை ஊடகங்களும், நாளிதழ்களும் செய்திகளாக வெளியிட்ட பிறகும். பருத்தி மற்றும் எள் பயிர்களின் சேதத்தை பார்வையிடுவதற்கோ, பாதிப்பை கணக்கிடுவதற்கோ, வேளாண் துறை அதிகாரிகளோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ இதுவரை இம்மாவட்டங்களுக்கு வரவில்லை என்று விவசாயப் பெருமக்கள் வேதனை தெரிவித்ததாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த விடியா அரசு பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில், இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுக்க உரிய நேரத்தில் அதிகாரிகளை அனுப்பாதது மட்டுமல்ல, பாதிப்புகளுக்கு உண்டான நிவாரணத் தொகையையும் மிகவும் குறைவாக கணக்கிடப்படுவதாகவும், 

அந்தத் தொகையையும் சுமார் ஒராண்டு கால தாமதத்திற்குப் பிறகே பாதிக்கப்பட்ட தங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே, இந்தக் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி மற்றும் எள் பயிரிடப்பட்ட திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும்; பயிர் பாதிப்பை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும் என்றும்; சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட அனுப்பி வைக்க வேண்டும் என்றும், இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

Edappadi Palaniswami demands compensation for rain affected farmers

இழப்பீடு வழங்கிடுக

ஒரு ஏக்கர் பருத்தி பயிரிட சுமார் 50 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்றும், எள் பயிரிட ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் முழுனமாக கணக்கெடுத்து, கோடை மழையினால் பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் பருத்தி பயிருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும்; ஒரு ஏக்கர் எள் பயிருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழக அமைச்சரவையில் மாற்றமா.? புதிய அமைச்சர்கள் யார்.?ஆளுநரை துரைமுருகன் சந்தித்தாரா.? நடந்தது என்ன.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios