தமிழக அமைச்சரவையில் மாற்றமா.? புதிய அமைச்சர்கள் யார்.?ஆளுநரை துரைமுருகன் சந்தித்தாரா.? நடந்தது என்ன.?

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநர் ரவியை துரைமுருகன் சந்தித்தாக தகவல் வெளியான நிலையில், அதனை துரைமுருகன் மறுத்துள்ளார் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

Duraimurugan has denied that he did not meet the governor regarding the cabinet reshuffle

3ஆம் ஆண்டில் திமுக ஆட்சி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து இரண்டு வருடங்கள் முடிவடைந்து 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வருட காலத்தில் அமைச்சர்கள் நீக்கப்படவில்லை ஆனால் அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக அமைச்சரவையில் கடந்த டிசம்பர் மாதம் உதயநிதி இணைக்கப்பட்டார். தற்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதிதிராவிடத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜ்க்கு புதிதாக தமிழக அரசு பொறுப்பு வழங்கப்பட்டது. அமைச்சரவை மாற்றத்தை உறுதி செய்யப்பட்டுள்ளது.  கயல்விழி செல்வராஜை தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தலைவராக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Duraimurugan has denied that he did not meet the governor regarding the cabinet reshuffle

தமிழக அமைச்சரவை மாற்றமா.?

மேலும் அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர், கயல்விழி ஆகியோர் நீக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.  அவர்களுக்கு பதிலாக டாக்டர் எழிலன், டிஆர்பி ராஜா, தமிழரசி ஆகியோர் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட இருப்பதாகவும் திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. குறிப்பாக  டாக்டர் எழிலனுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், தமிழரசிக்கு ஆதி திராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்படும் என கூறப்பட்டது. மேலும் மூத்த அமைச்சர்களின் துறைகளும் மாற்றி அமைக்கப்பட இருப்பதாக தெரிகிறது.  அதன் படி, மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறையும், கே.என்.நேருவுக்கு வருவாய் துறையும், தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையும் மற்றும் எஸ்.ரகுபதி தொழில்துறை அமைச்சராகவும் மா.சுப்பிரமணியத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.

Duraimurugan has denied that he did not meet the governor regarding the cabinet reshuffle

ஆளுநரை சந்தித்தாரா துரைமுருகன்

இந்தநிலையில் மூத்த அமைச்சரான துரைமுருகன் அமைச்சரவை மாற்றம் தொடர்பான பட்டியலை ஆளுநர் ரவியை சந்தித்து கொடுக்க சென்றதாக கூறப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், நான் அவசரமாக நெல்லையில் இருந்து தற்போது தான் சென்னை வந்தேன். தலைமைசெயலகம் சென்று முக்கிய பைலில் கைழுத்திட்டு விட்டு சாப்பிட வீடு வந்துள்ளேன். அமைச்சரவை மாற்றம் தொடர்பாக எனக்கு தெரியாது. யாமரியேன் பராபரம் என தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினை தான் சந்திக்கவில்லையென்றும், அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லையென கூறினார். அதற்கான நேரமும் தற்போது உருவாகவில்லையென தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஓ இதுதான் விஷயமா? ஓபிஎஸ் மீது அதிருப்தியில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன்? ஜெயக்குமார் அதிர்ச்சி தகவல்.!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios