அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற திட்டங்கள் குறித்து தனி மேடையில் துண்டு சீட்டு ஏதும் இல்லாமல் தனியாக விவாதிக்க தயாரா? என்று ஸ்டாலினை மீண்டும் விவாதத்திற்கு அழைத்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.  

அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற திட்டங்கள் குறித்து தனி மேடையில் துண்டு சீட்டு ஏதும் இல்லாமல் தனியாக விவாதிக்க தயாரா? என்று ஸ்டாலினை மீண்டும் விவாதத்திற்கு அழைத்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் மாதம் சேலத்திலும், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிராம சபை என்ற பெயரிலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்தவெளி வேன் மூலம் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தார். அதே சமயம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மேடை அமைத்து அந்த இடத்திற்கு கூட்டத்தை வர வைத்து பிரச்சாரம் செய்தார்.

துண்டு சீட்டை கையில் வைத்துக் கொண்டு படித்து பிரச்சாரம் மேற்கொண்டதை பலரும் கிண்டல் அடித்தனர். பிரச்சாரங்களின் போது ஸ்டாலின் தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து தனி மேடையில் கையில் துண்டு சீட்டு ஏதும் இல்லாமல் தனியாக விவாதிக்க தான் தயார் என்றும், ஸ்டாலின் இதற்கு தயாரா ? என்று சவால் விடுத்தார். இதற்கு ஸ்டாலின் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று சாக்கு தெரிவித்து விவாதத்திலிருந்து தப்பித்துக் கொண்டார்.

இதை எதிர்பார்த்த முதலமைச்சர், ஸ்டாலினை கிண்டலடிக்கும் வகையில் மீண்டும் விவாதத்திற்கு அழைத்தார். இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினை விவாதத்திற்கு கூப்பிட்டார். முதலமைச்சர் நான்கு முறை அழைத்தும் எவ்வித பதிலும் தெரிவிக்காமல் ஒடி ஒளிந்து கொண்டார் ஸ்டாலின் . விடாமுயற்சியாக முதலமைச்சர் மீண்டும், இந்தியா டுடே குழுமத்தின் சார்பில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட போது ஸ்டாலினை துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்திற்கு அழைத்துள்ளார். துண்டு சீட்டு ஸ்டாலின் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வரும் வேளையில், முதலமைச்சரும் ”துண்டு சீட்டு இல்லாமல் வாங்க” என்று ஸ்டாலினை கூப்பிடுவது, ஸ்டாலின் ஓடி ஒளிவதற்கு காரணம் என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களது கற்பனைகளை சமூக வலைத்தளங்களில் அள்ளி தெளித்து வருகின்றனர். 

இந்த முறை ஸ்டாலின் தப்பித்து விடாத வகையில் முதலமைச்சரின் சவால் குறித்து நாளை கலந்து கொள்ளும் ஸ்டாலினிடம் முதலமைச்சரின் சவால் குறித்து முன் வைக்கப்படும் என்று இந்தியா டுடேவின் மூத்த ஆசிரியர் ராகுல் கன்வால் தெரிவித்தார். 

அரசியல் அனல் பறக்கும் இந்த நேரத்தில், முதல்வர் அழைக்கும் இந்த நேரடி சவாலை எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் ஏற்பாரா? அல்லது சாக்கு சொல்லிவிட்டு மீண்டும் தப்பித்துவிடுவாரா? என்ற கேள்வி அனைவர் மத்தியில் எழுந்துள்ளது.