Asianet News TamilAsianet News Tamil

"பல்வேறு திட்டங்களுக்கு நபார்டு வங்கியின் நிதி அவசியமாகிறது" - முதல்வர் பெருமிதம்!

edappadi palanisamy talks about nabard bank
edappadi palanisamy talks about nabard bank
Author
First Published Jul 26, 2017, 1:23 PM IST


சுய உதவிக் குழுக்களுக்கு ஆண்டுதோறும், 18 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி சார்பாக 36-வது ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. 

இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துக் கொண்டார். அப்போது, தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்து வரும் நபார்டு வங்கிக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். 

edappadi palanisamy talks about nabard bank

பெண்கள் முகத்தில் மலர்ச்சியையும், வாழ்வில் வளர்ச்சியையும் நபார்டு வங்கி ஏற்படுத்தி உள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு ஆண்டுதோறும், 18 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கி வருவதையும், இதில் வங்கிகளின் பங்களிப்பு 6 ஆயிரம் கோடி மட்டுமே உள்ளதாகவும் தெரவித்தார். வருங்காலங்களில் இந்தப் பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்றார்

தமிழகத்தில் நீராதாரங்களை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். ரூபாய் மதிப்பிழப்பு விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கலின்போது நபார்டு வங்கி உதவியதாக அவர் தெரிவித்தார்.

நபார்டு வங்கி திட்டத்தால் லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். சுய உதவி குழுக்களுக்கு வங்கிகள் அளிக்கும் கடனுதவியை அதிகரிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios