Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடியிடம் சரண்டர்..! கருணாஸ், அன்சாரி எம்எல்ஏ பதவி தப்பிய கதை..!

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருடன் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸ் மற்றும் அன்சாரி ஆகியோரின் பதவியும் பறிக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில் அந்த முடிவிலிருந்து அதிமுக பின் வாங்கியுள்ளது.

edappadi palanisamy Surrender... karunas, thameemun ansari
Author
Tamil Nadu, First Published Apr 29, 2019, 9:38 AM IST

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருடன் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸ் மற்றும் அன்சாரி ஆகியோரின் பதவியும் பறிக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில் அந்த முடிவிலிருந்து அதிமுக பின் வாங்கியுள்ளது.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காலக்கெடு முடிந்த பிறகு விளக்கம் அளித்தாலும் சரி விளக்கம் அளிக்காவிட்டாலும் சரி அந்த மூன்று பேரின் பதவியை பறித்தது உறுதி என்கிறது சட்டப்பேரவை வட்டாரத் தகவல்கள். அதேசமயம் கருணாஸ் மற்றும் அன்சாரி ஆகியோரின் எம்எல்ஏ பதவியையும் பறிப்பதற்கான ஆலோசனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. edappadi palanisamy Surrender... karunas, thameemun ansari

அப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது தரப்பில் இருந்து எம்எல்ஏக்கள் கருணாஸ் மற்றும் அன்சாரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். தொடர்ந்து ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் இருவரின் எம்எல்ஏக்கள் பதவியையும் அழிப்பது குறித்து ஒரு நொடி கூட யோசிக்க போவதில்லை என்று எடப்பாடி தரப்பு எச்சரிக்கை விடும் பானியில் பேசியுள்ளார். edappadi palanisamy Surrender... karunas, thameemun ansari

ஏற்கனவே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ள நிலையில் தங்களுக்கும் எந்த நேரத்திலும் நோட்டீஸ் அனுப்பப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதை கருணாஸ் மற்றும் அன்சாரி தரப்பு நடந்துகொண்டது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்று இன்று கொண்டுவரப்பட்டால் ஒரு உத்தரவை ஏற்று அதிமுகவுக்கு வாக்களிக்க உள்ளதாகவும் அல்லது உடல்நிலை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி மருத்துவமனையில் சென்று படுத்துக் கொள்வதாகவும் அன்சாரி மற்றும் கருணாஸ் தரப்பில் முதலமைச்சருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.edappadi palanisamy Surrender... karunas, thameemun ansari

இதனையடுத்தே கருணாஸ் மற்றும் அன்சாரி ஆகியோரின் எம்எல்ஏ பதவியை பறிக்க முடிவில் இருந்து எடப்பாடி தரப்பு பின்வாங்கியதாக கூறுகிறார்கள். மேலும் அதிமுக கொறடா ராஜேந்திரனும் கூட அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தனது புகாரில் இருந்து அன்சாரி மற்றும் கருணாஸ் பெயரை நீக்கியுள்ளார். அவர்களுக்கு எதிராக தங்களிடம் ஆதாரங்கள் இல்லை என்று கொறடா ராஜேந்திரன் மறுத்து வருகிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios