மோடி அரசாங்கத்திடம் மிக முழுமையாக அடங்கி, ஒடுங்கி கிடப்பதால் அதிமுக. அரசு தலை தப்பிப் பிழைத்து ஓடிக்கொண்டிருக்கிறது! என கலாய்க்கிறது எதிர்க்கட்சிகள். எதிர்க்கட்சிகள் தான் இப்படின்னா, கட்சிக்குள்ளேயும் இப்படி மோடியால் அண்டி பிழைப்போர் எனும் வாய்  பேசி வருகிறார்களாம். அதாவது எடப்பாடியாரை விட பன்னீர் தான் பிஜேபியிடம் அதிகம் நெருங்கி நிற்கிறார். எப்படின்னா, கட்சியின் முடிவுக்கு ஒத்து வராமல் முத்தலாக் தடை சட்ட மசோதாவை ஆதரித்து பேசும் அளவிற்கு நெருங்கி நிற்கிறது ஓபிஎஸ் கோஷ்டி. எடுத்துக்காட்டுக்கு அசொல்லனும்னா ஓபி ரவீந்தரநாத் அப்போதே ஆதரவுக்குரல் கொடுத்தது.

இதை இப்படியே விட்டுக்கொண்டு இருந்தால் ஆகாது! எனும் முடிவுக்கு வந்திருக்கும் இபிஎஸ், வரும் டிசம்பர் மாதத்திற்குள் வர இருக்கும் கழக பொதுக்குழுவில், பொதுச்செயலாளர் தேர்வையும் நடத்திட முடிவெடுத்துள்ளார். அதாவது ஒரு மனதாக தன்னை பொதுச்செயலாளராக கட்சியினர் தேர்ந்தெடுக்கும் சூழலை உருவாக்க பக்கா பிளான் போட்டுள்ளாராம். இந்த விஷயத்தில் எடப்பாடிக்கு பக்கபலமாக வழக்கம்போல் மணி அண்ட் கோ (வேலுமணி, தங்கமணி) என இரு அமைச்சர்களும் களமிறங்கியுள்ளனர். 

நடந்து முடிந்த வேலூர் தேர்தலுக்காக அங்கே முகாமிட்டிருந்த நாட்களை இதற்காக தெளிவாக பயன்படுத்தி இருக்கின்றனர். வேலூர் தொகுதி பிரசாரத்திற்காக அங்கே வந்து குவிந்திருந்த அனைத்து மாவட்ட அதிமுக. நிர்வாகிகளையும், முக்கிய நபர்களையும் அழைத்து ‘புரட்சித்தலைவர் எனும் ஒரே தலைவர் தான் இந்த இயக்கத்தை துவக்கினார். அம்மா எனும் ஒரு தலைவர் தான் இந்த இயக்கத்தை மேம்படுத்தினார். அதே போல் ஒரே தலைமை இருந்தால் தான் நம்ம கட்சி ஜெயிக்கும், ஜெயிக்க முடியும். அதனால அண்ணன் எடப்பாடியாரை நம் இயக்கத்தின் பொது செயலாளராக்குவோம். இதற்கு உங்க அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும் என்று பிரைன் வாஷ் செய்து, அதற்கு தலையாட்டவும் வைத்துள்ளனர். 

பன்னீருக்கு மிக பயங்கர பிட்டாக இருக்கும் சிலரை மட்டும் விட்டுட்டு மீதி அனைவரையுமே எடப்பாடியாருக்காக பிரைன் வாஷ் செய்துள்ளனர். ஏசிசண்முகத்துக்கு பிரசாரத்துக்கு வந்த இடத்தில் இவர்கள் இப்படி எடப்பாடிக்கு பிரசாரம் செய்யும் விஷயம், பன்னீரின் காதுக்கு சென்றிருக்கிறது. என்ன பேசுகிறார்கள்? என்பதை தெளிவாக புரிந்து கொண்ட அவர் பதறி போய் விட்டாராம். இந்த மேட்டரை அப்படியே அமித்ஷாவின் கவனத்துக்கும் கொண்டு போனாராம். அதற்கு அவர் இந்த விஷயம் பன்னீருக்கு முன்னாடியே எனக்கு வந்துவிட்டது. என்று அதிமுக. தூதுவர்களிடம் சொல்லியிருக்கிறார். உள்துறை அமைச்சரல்லவா! இது கூட இல்லையென்றால் எப்படி?

ஆக அதிமுகவில் உள்  பூகம்பம் துவங்க தயாராகிவிட்டது என்பது புலனாகிறது. அதேபோல ஏ.சி.சண்முகத்துக்கு பிரசாரம் செய்ய போய்விட்டு, அவரை கண்டு கொள்ளாமல் எடப்பாடியாருக்கு பிரசாரம் செய்த முக்கிய அமைச்சர்கள் பண்ண வேலைதான் இப்போ ஏசிஎஸ்க்கு தோல்வி மிஞ்சியிருக்கிறது என சொல்கிறார்கள் வேலூர் அதிமுகவினர்.