8 வழிச்சாலை சேலத்திற்கானது மட்டுமல்ல, இந்த சாலையால் புதிய தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

8 வழிச்சாலை சேலத்திற்கானது மட்டுமல்ல, இந்த சாலையால் புதிய தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. தனக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததால் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை என தினகரனை விமர்சனம் செய்துள்ளார். அனைத்து ஆட்சிகளிலும் ஆணவ படுகொலைகள் நடக்கின்றன. இந்த ஆணவ கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திமுக- காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது, தற்போது எங்கள் பக்கம் பழியை திருப்பிவிடுகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், 8 வழிச்சாலை மாநில அரசின் திட்டமல்ல, மத்திய அரசின் திட்டம். 8 வழிச்சாலை சேலத்திற்கானது மட்டுமல்ல, இந்த சாலையால் புதிய தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்படுத்த உதவும். போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கவே 8 வழிச்சாலை கொண்டுவரப்படுகிறது. சாலை அமைக்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்தார். 

நிலம் எடுக்கப்படுவதற்கு விவசாயிகளுக்கு 3 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்கப்படுகிறது. விரைவுச் சாலை திட்டத்திற்கு வந்துள்ள முட்டுக்கட்டைகளை மத்திய அரசு சந்தித்துக் கொண்டுள்ளது. தங்கத்தின் மீதான வரி உயர்வால் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.