Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதாவின் கெத்தை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி... அசைக்க முடியாத அசுர வளர்ச்சி!!

ஜெயலலிதாவுக்காக அமைச்சர் பெருமக்கள் வரிசைகட்டி பவ்வியமாக காத்திருந்ததை பார்த்திருப்போம். ஆனால் எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட ஜெயலலிதாவிற்கு நிகராக வெறும் 3 ஆண்டில் அசுரவளர்ச்சி அடைந்திருப்பது, ஆளுங்கட்சியினரை மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினரையும் வியக்கவைத்திருக்கிறது. 

Edappadi palanisamy photo viral an social media
Author
Chennai, First Published Jul 28, 2019, 12:35 PM IST

ஜெயலலிதாவுக்காக அமைச்சர் பெருமக்கள் வரிசைகட்டி பவ்வியமாக காத்திருந்ததை பார்த்திருப்போம். ஆனால் எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட ஜெயலலிதாவிற்கு நிகராக வெறும் 3 ஆண்டில் அசுரவளர்ச்சி அடைந்திருப்பது, ஆளுங்கட்சியினரை மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினரையும் வியக்கவைத்திருக்கிறது. 

அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு நாடே பெண்ணை அரியணையில் ஏற்றிப் பார்க்க விரும்பாத நிலையில், ஒரு பெண் ஒற்றை ஆளாக ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்தவர் ஜெ. நடிகை, அரசியல்வாதி, கட்சியின் பொதுச் செயலாளர் என ஒவ்வொரு படியாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியில் அமர்ந்து பல முகங்கள் தமிழக மக்கள் மட்டுமல்ல இந்தியாவே திரும்பிப் பார்த்தது. தலைமைத்துவ பண்புகள் அனைத்தையும் பெற்று சிறந்த லீடராக மாஸ் காட்டியவர் ஜெ.

சட்டமன்றத்தில் ஜெ'வின் கர்ஜனை மிகுந்த வார்த்தைகள் அவ்வளவு பெரிய அரங்கில் அனைவரையும் ஒரே பக்கமாக இழுக்கும் ஆளுமை நிறைந்தது. கருணாநிதி எனும் ஜாம்பவானை  எழுத்திலும், பேச்சிலும் வெல்வது கடினம் என்றால், அதற்கு சற்றும் சளைக்காதவர் தான் இரும்பு மனுஷி ஜெ. 
Edappadi palanisamy photo viral an social media

அனைத்துத் தலைவர்களின் உரையும், நாம், நமது என்ற போக்கிலேயே இருக்கும். இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் ஜெயலலிதா. ‘எனது ஆட்சியில் நடந்த சாதனைகள்’, ‘மக்களுக்காக நான்... மக்களால் நான்’ எனும் தனிமனித விஷயத்தை முன்னிறுத்துவதில் ஜெ' கில்லாடி.  வீழ்வதைவிட விரைந்து எழுவதே மேல் என்ற வாசகம் ஜெ'வுக்காக உருவாக்கியது என்றே சொல்லலாம். இவர், வீழ்ந்தபோதெல்லாம் எவ்வளவு சீக்கிரம் திரும்ப வரவேண்டும் என்று ஆக்ரோஷமா யோசிக்கும் அந்த தில் ஜெவிடம் மட்டுமே பார்க்க முடியும்.  கட்சியில் ஜெ' தான் எல்லாம் என்று நினைக்கவைத்தது  அவரின் அசத்தலான ஆளுமை.Edappadi palanisamy photo viral an social media

இன்று, அவர் இல்லை என்றாலும்...பல இன்னல்களையும் தாண்டி கட்சியை நடத்தி வருகிறார்கள். மாபெரும் இரும்புக்கோட்டையான அதிமுக, ஒரே ஆளுமையின் கீழ் நீண்டகாலம் நன்றாக இயங்கியது. திடீரென அந்த ஆளுமையை இழந்த நிலையில், அங்கு மிகப்பெரிய வெற்றிடம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜெயலலிதா போன்ற தனிமனித ஆளுமையின் வெற்றிடத்தை நிரப்ப பல வருடங்கள் ஆகும். ஆனால் அந்த இடத்தை சசிகலா என்ற ஆளுமையால் சரிக்கட்ட நினைத்தனர். ஆனால், அதுவும் நடக்காமல் போனது.

ஜெயலலிதா என்ற ஒற்றை இரும்பு மனுஷியை மட்டுமே பார்த்த இந்த தமிழகத்துக்கு, அந்த இரும்பு மனுஷி மறைந்ததும்  கூவத்தூர் சம்பவம் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது. அதேபோல ஜெயலலிதா இருக்கும்வரை கமுக்கமாக இருந்த சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிச்சாமியை முதல் அமைச்சராக்குவதில் முக்கிய பங்கு இருந்தது. இதனைத் தொடர்ந்து மறைந்த ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக களம் கண்டார் தினகரன். அப்போது  வாக்களர்களுக்கு பணம் கொடுக்க அதிமுகவினர் முயன்றதாக குற்றம்சாட்டி தேர்தலை நிறுத்தியது, தேர்தல் கமிஷன்.

Edappadi palanisamy photo viral an social media

அடுத்த சில நாட்களில், எந்த இரட்டை இலை சின்னதிற்காக லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டில் ஜெயிலுக்கு போனாரோ? அதே இரட்டை இல்லை சின்னத்திற்காக பன்னீர்செல்வத்துக்கு துணைமுதல்வர் பதவியை கொடுத்து தனது முதல் ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார். உள்ளே போகும் போது நடந்திருந்த காட்சிகள், சென்னை வந்ததும் மாறியிருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தினகரனுக்கு எதிராக செயல்பட, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணியை இணைத்து தனது பலத்தை அதிகரித்துக்கொண்டார். அந்த சமயத்தில் தமிழக அரசியல் களத்தில் நடந்த சம்பவங்களும் ஏற்பட்ட திருப்பங்களும் பொலிடிக்கல் த்ரில்லர் படத்தையே தோற்கடிக்கும் அளவுக்கு இருந்தது. தினகரனின் ஆதரவாளர்கள் எடப்பாடிக்கு  குடைச்சல் கொடுத்த அத்தனை போரையும் அசால்ட்டாக தூக்கியடித்துவிட்டு தனது முதல்வர் பதவியை தொடர்ந்தார்.

Edappadi palanisamy photo viral an social media

இதனையடுத்து, நடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் என அபாயகரமான நிலையில் இருந்த எடப்பாடி, ஒரு பக்கம் ஸ்டாலின் மற்றொரு பக்கம் தினகரன் என இரண்டு பேரையும் சமாளித்து வெற்றிகண்டார். என்னதான் நாடாளுமன்றத் தேர்தல் படு தோல்வியென்றாலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தனக்கு தேவையானதை அசால்ட்டாக சாதித்துக்கொண்டார். அதுமட்டுமல்ல, ஆட்சியை கலைக்கும் ஸ்டாலினின் கனவை பஸ்பம் ஆக்கியது மட்டுமல்லாமல், இடையூறாக இருந்த தினகரனின் கதையை முடித்து டம்மி பீஸாக்கினார். எடப்பாடியின் இந்த தில்லை பார்த்த அமமுகவில் இருந்த முக்கிய புள்ளிகள் கூடாரத்தை காலி செய்துவிட்டு எடப்பாடி எனும் ஆண் ஜெயலலிதாவின் நிழலில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

Edappadi palanisamy photo viral an social media

எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு விவசாயி என கர்வமாக சொல்லிக்கொள்வது உண்டு.  அப்படிப்பட்ட விவசாயி பழனிசாமி, இப்போது ஜெயலலிதா எனும் இரும்பு மனுஷியை மிஞ்சும் அளவிற்கு குறுகிய காலத்தில் அசுரவளர்ச்சியை அடைந்துள்ளார். ஒரு ஆளுமையாக எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை பறைசாற்றுவதற்கு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் ஒற்றை புகைப்படம் போதும். ஜெயலலிதா ஏதாவது நிகழ்ச்சிக்கு போகும் போது அங்கு அமைச்சர்கள் பூங்கொத்துடன் வரிசைகட்டி காத்துக்கொண்டிருப்பதைப்போல, எடப்பாடி பழனிசாமியின் வருகைக்காக மொத்த அமைச்சர்களும் பவ்வியமாக காத்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை பார்த்தாலே அவரது தற்போதைய பலம் தெரியும்... எடப்பாடிTo எடப்பாடியார்!!

Follow Us:
Download App:
  • android
  • ios