Edappadi Palanisamy have no guts speak with modi about cauvery
தனது அரசைக் காப்பாற்றிக் கொள்ளவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திக்கலாமே தவிர, காவிரி விவகாரம் குறித்து பிரதமரிடம் பேசும் துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
டெல்லியில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மாநாடு இன்று டெல்லியில் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,, பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், காவிரி விவகாரம் குறித்து வலியுறுத்துவேன் என்று கூறியிருந்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்துக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசும் துணிவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் பேசிய அவர், இதுவரை பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும், அப்படியே நேரம் ஒதுக்கப்பட்டாலும் தனது அரசைக் காப்பாற்றிக் கொள்ளவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திப்பார் என்றும் ஸ்டாலின் கருத்து
தெரிவித்துள்ளார்.
