அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவது 99% சதவிகிதம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதிமுக வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை சிலர் வீழ்த்த முயல்கின்றனர்..! அந்த சூழ்ச்சிகளை முறியடிப்போம் என இபிஎஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒற்றை தலைமை- அதிகரிக்கும் ஆதரவு

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அந்த தீர்மானத்தை ரத்து செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இடங்கள் உருவாக்கப்பட்டது. தற்போது அந்த இரட்டை பதவி வேண்டாம் ஒற்றை தலைமையே பொதும் என ஓ.பன்னீர் செல்வத்தை புறக்கணிக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஓபிஎஸ் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுக்குழு ஏற்பாடு மட்டும் தான் முக்கிய அம்சமாக இருந்த நிலையில் திடீரென ஒற்றை தலைமை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். இந்தநிலையில் அடுத்தடுத்த திருப்பங்கள் அதிமுகவில் ஏற்பட்டுள்ள நிலையில் 99% அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ்க்கு குறைந்த அளவிலான நிர்வாகிகள் மட்டும் தற்போது வரை ஆதரித்து வந்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்பது தெரியாமல் ஓ.பன்னீர் செல்வம் குழப்பம் அடைந்துள்ளார்.

சூழ்ச்சிகளை முறியடிப்போம்

இந்தநிலையில் ஒற்றை தலைமை தொடர்பான ஆலோசனை கூட்டம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Scroll to load tweet…

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய இபிஎஸ் பலம் வாய்ந்த கட்சி அதிமுக, வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. சிலர் வீழ்த்த முயல்கின்றனர் , அந்த சூழ்ச்சிகளை முறியடிப்போம், அனைவரும் துணை கொண்டு அதிமுக எதிர்காலத்தில் பலம் பொருந்திய கட்சியாக திகழும் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி குறிப்பிட்ட அதிமுகவை வீழ்த்த சூழ்ச்சி செய்வது யார் என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்

EPS Vs OPS :எல்லாம் கையை மீறி போச்சு.. வேறு வழியே இல்லாமல் பொதுக்குழுவை புறக்கணிக்கிறாரா ஓபிஎஸ்..?