Asianet News TamilAsianet News Tamil

மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசு.. ஏழைகளுக்கு எட்டாக் கனியா ஆகிறதா ஆவின் பொருட்கள்? இபிஎஸ்..!

ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு  எனது கடுமையான கண்டனங்கள். கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது.

Edappadi Palanisamy condemns rise in ghee, butter prices
Author
First Published Dec 17, 2022, 1:07 PM IST

ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு  எனது கடுமையான கண்டனங்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.  

தமிழக அரசு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம். இங்கு பால் விற்பனை மட்டுமின்றி நெய், வெண்ணெய், பன்னீர், இனிப்பு உட்பட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆவின் பொருட்களின் விலையை அரசு அவ்வப்போது உயர்ந்து வருகிறது. ஐஸ் கிரீம், தயிர், நெய், ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் உள்ளிட்டவைகள் விலை உயர்த்தியது. ரூ.580-ஆக இருந்த ஆவின் நெய் விலையில் ரூ.50 உயர்த்தி, ரூ.630 என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஏழைகளுக்கு எட்டாக் கனியாக ஆகிறதா ஆவின் பொருட்கள் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க;- அரசு பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

Edappadi Palanisamy condemns rise in ghee, butter prices

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு  எனது கடுமையான கண்டனங்கள். கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது.

Edappadi Palanisamy condemns rise in ghee, butter prices

எளியோர் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாகனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்ப்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த விடியா அரசு. இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ரூ. 20 உயர்த்தியுள்ளனர்.

 

எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா? என எடப்பாடி பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க;-  திமுகவுக்கு ஒன்னு மட்டும் சொல்றேன்! அம்மா சொல்லை வேண்டுமானால் நீங்க நீக்கிவிடலாம்.. ஆனால்.. சசிகலா ஆவேசம்.!

Follow Us:
Download App:
  • android
  • ios