சேலத்தில் அரசு  நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவசர அவசரமாக சென்னை திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக தலைவர் கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கருணாநிதி குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனால் மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நிமிடத்தில், கருணாநிதி குறித்து 3 வது அறிக்கை வெளியிட  உள்ளனர்.

தற்போது காவேரி மருத்துவமனைக்கு  ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி, ராசாத்தி அம்மாள், உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர்.

இதனிடையே சேலத்தில்  நாளை நடக்கவிருந்த நிகழ்ச்சிகளை அனைத்தையும் திடீரென  ரத்து செய்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர அவசரமாக  சென்னை திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.