அவங்களே சொல்லிட்டாங்களா.. அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட இபிஎஸ்? அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட  மோதல் நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதுமாக இருந்து வருகின்றனர். ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

Edappadi Palanisamy approved as AIADMK General Secretary? OPS shock

அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு இரண்டாவது முறையாக  எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்திருப்பது ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட  மோதல் நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதுமாக இருந்து வருகின்றனர். ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வரும் 4ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

இதையும் படிங்க;- இபிஎஸ் தாக்கல் செய்த அதிமுகவின் வரவு, செலவு கணக்கு..! அங்கீகரித்ததா தேர்தல் ஆணையம்..? அதிர்ச்சியில் ஓபிஎஸ்

Edappadi Palanisamy approved as AIADMK General Secretary? OPS shock

இந்நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவதற்காக அனைத்து கட்சி அரசியல் தலைவர்களிடம் மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு வருகிறது. அதன்படி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்டுள்ளது. அதில், குறிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

Edappadi Palanisamy approved as AIADMK General Secretary? OPS shock

ஏற்கனவே கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில், பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மத்திய அரசு எழுதியிருந்தது.

Edappadi Palanisamy approved as AIADMK General Secretary? OPS shock

அதேபோல், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 21ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமர்ப்பித்துள்ள கட்சியின் வரவு செலவு அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவித்து அவரை இடைக்கால பொது செயலாளராக அங்கீகரித்திருந்தது. அடுத்தடுத்து மத்திய அரசு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என குறிப்பிடப்படுவது ஓபிஎஸ்-ஐ அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

இதையும் படிங்க;-  கட்சி கொடியையும், சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்துவேன்! உன்னால முடிஞ்சத பாத்துக்கோ! EPSஐ அலறவிடும் OPS.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios