Asianet News TamilAsianet News Tamil

தினகரன் அணியில் ஸ்லீப்பர் செல்ஸ்? ஆர்.கே.நகர் காரரை அலறவிட்ட எடப்பாடியார்!

edappadi palanisamay sleepparcells in dinakaran team
edappadi palanisamay sleepparcells in dinakaran team
Author
First Published Jan 25, 2018, 1:38 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


தினகரன் அணியிலிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் முதல்வரின் 'ஸ்லீப்பர் செல்ஸ்' எனத் தெரியவந்துள்ளதால், தினகரன் அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம். 

முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை எல்லாம் முடிந்து தீர்ப்பு வெளியாகும் நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறார்களாம் சில அமைச்சர்கள்.

edappadi palanisamay sleepparcells in dinakaran team

“தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன், அதிமுக உறுப்பினராகவே இருப்பேன்”என்று கூறியுள்ளார். மேலும், “18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்தால் மேல்முறையீடு செய்யமாட்டோம். 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருப்போம். என தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியிருந்தார். ஒருவேளை தினகரன் தனிக்கட்சி தொடங்கினால், அதில் எங்களால் சேர முடியாது. ஆனால், அவர் தனியாகக் கட்சி தொடங்கும் பட்சத்தில், 18 எம்.எல்.ஏ.க்களும் வெளியிலிருந்து ஆதரவு தருவோம். அவர் தனியாகச் செயல்படுவார். நாங்கள் தனியாகச் செயல்படுவோம்.

ஆனால் எங்களின் ஆதரவு அவருக்கு எப்போதும் இருக்கும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார். தினகரன் கட்சி தொடங்கும் பட்சத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் அவரோடு போனால், கட்சித் தாவல் தடை சட்டத்தில் பதவியை இழக்க நேரிடும். ஏற்கெனவே இது தொடர்பாக வழக்கு நடந்து வரும் சூழ்நிலையில் இப்படியான ஒரு ரிஸ்க் எடுக்க 18 பேருமே தயாராக இல்லை. அதனால்தான் வெற்றிவேல் இப்படிச் சொல்லியிருக்கிறார். தினகரனுடன் இது தொடர்பாக கலந்து பேசிவிட்டுத்தான் மீடியாவிடம் பேசினார் வெற்றிவேல்.

edappadi palanisamay sleepparcells in dinakaran team

இந்நிலையில், தினகரன் எடுக்கும் ரகசிய முடிவுகள்கூட எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்குச் சென்றுவிடுகிறது. இதனால், தினகரன் தன்னுடைய விசுவாசமுள்ள ஆதரவாளர்களைத் தவிர வேறுயாரிடமும் எந்தத் தகவலையும் சொல்வதில்லை, இப்படி இருக்கையில் , கடந்த இரு  தினங்களுக்கு முன்பு எடப்பாடியார் தரப்பிலிருந்து அமைச்சர் ஒருவர் மூலமாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் பங்கேற்றார்களாம்.

அவர்களிடம் பேசிய அமைச்சர், ‘இவ்வளவு நாளாக கட்சியை மீட்கப் போறேன் என்று சொல்லிட்டு இருந்தவரு, இப்போ தனிக்கட்சி பற்றி யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு. இனி அதிமுக என்றால், அம்மா என்றால் அது நாங்கதான். இனியும் அவரோடு போய் என்ன சாதிக்க முடியும்னு நினைக்கிறீங்க? ஒரு தொகுதியில் பணத்தை கொடுத்து ஜெயிச்சுட்டா எல்லா தொகுதியிலும் அவரால் ஜெயிக்க முடியுமா? இதெல்லாம் பிராட்டிக்கலா சாத்தியாமா என்பது உங்களுக்கே தெரியும். நீங்க எதையும் யோசிக்காமல் எங்கள் பக்கம் வாங்க. இது நம்ம ஆட்சி. நம்ம கட்சி. உங்களுக்கு என்ன வேணுமோ அதை செஞ்சு கொடுக்க இங்கே தயாரா இருக்கோம். நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க...’ என்று சொன்னாராம்.

edappadi palanisamay sleepparcells in dinakaran team

இதற்கு  தென் மாவட்ட எம்.எல்.ஏ. ஒருவர், ‘எங்களுக்கு கொஞ்சம் டைம் வேணும். கலந்து பேசிட்டு சொல்றோம். எங்களோட நோக்கம் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான். இன்னொரு கட்சி தொடங்கி மறுபடியும் பிரிஞ்சு நிற்கணும்னு நாங்க எந்த சூழ்நிலையிலும் நினைக்கலை. நாங்க பேசிட்டு சொல்றோம்’ எனச் சொன்னாராம். இந்த பேச்சுவார்த்தையின் தகவல் எடப்பாடிக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. எப்படியாவது பேசி அவங்களை இங்கே கொண்டு வந்துடுங்க... என சொன்னாராம் எடப்பாடி”

edappadi palanisamay sleepparcells in dinakaran team

வழக்கமாக தினகரன் தான் தங்களின் ஆதரவாளர்கள் ஸ்லீப்பர் செல்களாக எடப்பாடி பழனிசாமியின் அணியில் இருப்பதாகவும் தேவைப்படும் போது அவர்கள் வெளியில் வருவார்கள் என்று சொல்லிவந்த நிலையில், தற்போது தினகரனின் அணியில் நம்பிக்கைக்குரவர்கலாக இருக்கும் இந்த டீமில் ஏழு எம்.எல்.ஏக்கள் இருப்பது தெரிந்த தினகரனுக்கு ஆட்டம் கண்டுள்ளதாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios